உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

❖ LDMMLDMOшLD -17 →

நூல்கள் முதலாக மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றையும் நன்கு விளக்கும் எல்லாவகையான நூல்களும் முன்னும் பின்னும் இருந்த சான்றோரால் நிரம்ப எழுதப்பெற்ற பெருவளம் வாய்ந்ததாயும் இன்னும் வருங்காலத்தில் அவ்வளம் மேன்மேற் பெருகப் பெறுவதாயுந் துலங்குவது; இப்போது உலகம் எங்கணும் வழங்கப்பெறும் மற்றை எல்லா மொழிகளுமோ தமிழுக்கு மிகமிகப் பிற்பட்ட காலத்தே அஃதாவது இற்றைக்கு ஐந்நூறு அல்லது அறுநூறு ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றி, அவற்றுள்ளுஞ் சிலவே இருநூறு முந்நூறு ஆண்டுகளாக இயற்றப்பட்டுவரும் லக்கண இலக்கியக் கலைநூல்களை உலவுகின்றன. அதனால், இப்புதுமொழிகளின் புதுச்சிறப்புத் தமிழ்மொழியின் பழஞ்சிறப்புக்கு எட்டுணையும் ஒவ்வாததா யிருக்கின்றது. ஆதலால், தமது பழம்பெருஞ் சிறப்பினைச் சிறிதும் உணர்ந்து பாராது அயலவரது புதுச்சிறப்பினைக் கண்டு மயங்கி அவர் வழிப்படுவதில் தலைகால் தெரியாமற் றடுமாறி நிற்கும் நம் இஞ்ஞான்றைத் தமிழ்மக்கள், தமது தாய்மொழியாகிய தமிழுக்குப் பண்டு தொட்டுள்ள ஏற்றத்தை ஆய்ந்தோய்ந்து பார்த்துத் தக்கது செய்யக் கடவராக!

இந்தியர் தாய்மொழி கல்லாதவர்

உடையனவாய்

முன்னமே காட்டியபடி இத்தென்னாடு எங்கணுந் தமிழ்மொழி பேசும் மாந்தர்களே பெரும்பாலும் நிரம்பி யிருக்கின்றனர். இவர்கள் எல்லாருந் தாம் பிறந்த நாள் தொட்டுத் தமிழைப்பேசித் தமிழிலேயே வாழ்க்கை செலுத்து கின்றவர்களாய் இருந்தாலுந், தமிழைப் பிழையின்றி எழுதவோ, தமிழிலுள்ள அளவற்ற நூல்களிற் சிலவற்றை யாவது கற்றுத்தெளியவோ தெரியாதவர்கள்; தமது தாய்மொழியாயிற்றே என நினைந்து அதன் பொருட்டாக வாவது அதனைக் கற்கும் விருப்பமேனும் அவர்க்கு உளதோ வென்றால் அது தானுந் தினையளவும் இல்லை. கோடிக் கணக்கான இத்தமிழ் மக்களுள் ஆயிரவரில் ஒருவர்க்குக் கூடத் தமது பெயரை எழுதிக் கையெழுத்துச் செய்யத் தெரியாதென்றாற், கல்வியறிவில்லா இவ்வேழை மக்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/211&oldid=1584458" இலிருந்து மீள்விக்கப்பட்டது