உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் -17

இப்போது நூல் வழக்கிற் கொணரப்பட்டிருக்கும். இந்தி மொழியை நம் தென்னாட்டவர் கற்றுத் தெரிந்து கொள்வ தனால், இவர்கள் வடநாட்டவ ரெல்லாருடனும் பேசி அளவளாவி விடக்கூடும் என்று சிலர் மடிகட்டி நின்று கூறுவது நம்மனோரை ஏமாற்றும் பொய்யுரையேயாம்.

இந்திமொழி நூல்கள்

இனி, மேற்காட்டிய கலவைப் புதுமொழியான இந்தி யில் நூல்கள் உண்டான வரலாற்றைச் சிறிது விளக்குவாம். கி.பி. 1400ஆம் ஆண்டு முதல் 1470ஆம் ஆண்டு வரையில், அஃதாவது இற்றைக்கு 467 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘இராமானந்தர்’ எனப் பெயரிய ஒரு துறவி, இராமனையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடல் வேண்டுமென வற்புறுத்திச் சொல்லி வடநாட்டின்கட் பல இடங்களிலும் இராம வணக்கத்தைப் பரவச் செய்து வந்தார். கல்வியறிவில்லா வடநாட்டுப் பொது மக்கட்கு, இராமன் தன் தந்தையின் கட்டளையால் அரசு துறந்து கானகம் ஏகி, அங்குந் தன் மனையாளைப் பறிகொடுத்து அடைந்த துயரக்கதை மிக்கதொரு மனவுருக்கத்தை யுண்டாக்கி, அவரையெல்லாம் எளிதிலே இராம வணக்கத் தின்பாற் படுப்பித்தது. இராமானந்தர் இராமன்மேற்பாடிய பாடல்கள் தாம் முதன்முதல் இந்தி மொழியில் உண்டானவை; அதனால் அவருடைய பாடல்கள் அடங்கிய இந்திமொழி நூல் ஆதிகிரந்தம்' என வழங்கப் படுகின்றது.

இனி, இராமானந்தர்க்குப் பின், அவர்தம் மாணாக் கருள் ஒருவரான ‘கபீர்தாசர்' என்பவர் இற்றைக்கு 430 ஆண்டுகளுக்கு முன் காசி நகரில் தோன்றினார். நெசவு தொழில் செய்யும் ஒரு மகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவ ரன ஒரு சாராரும், ஒரு பார்ப்பனக் கைம்பெண்ணுக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து அவளாற் கைவிடப்பட்டுப் பிறகு ‘நீரு’ எனப் பெயரிய ஒரு மகமதிய நெசவுகாரரால் இவர் எடுத்து வளர்க்கப்பட்டனரென மற்றொரு சாராருங் கூறுகின்றனர். இவருங், கடவுளை இராமன், அரி, கோவிந்தன், அல்லா என்னும் பெயர்களாற் பாடி வழுத்தினர். ஆனாலுங், கடவுள் பல பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தாரெனக் கூறுவது அடாதென்றும், இறைவனைக் கல் செம்பு கட்டை வடிவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/219&oldid=1584466" இலிருந்து மீள்விக்கப்பட்டது