உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

195

வைத்து வணங்குதல் பெருங்குற்றமாகுமென்றும், இந்து சமயக் கிரியைகளுஞ் சடங்குகளும் பொருளற்ற புன்செயல்களாகு மென்றும் இவர் தம்முடைய பாடல்களில் மிகவுங் கடுமையாக மறுத்துப் பாடியிருக்கின்றார். இந்தி மொழியின் ஒரு பிரிவான 'அவதி' மொழியில் இவருடைய பாடல்கள் பாடப்பட்டிருக் கின்றன. இந்தியின் மற்றொரு பிரிவான ‘மைதிலி' மொழியைக் கற்பவர்கள், 'அவதி' மொழியில் இருக்குங் கபீர்தாசரின் பாடல்களை எளிதிலே அறிந்து கொள்ளல் இயலாது. தாம் இயற்றிய 'விப்ரமதீசி' என்னுஞ் செய்யுள் நூலிற் கபீர்தாசர் பார்ப்பனருடைய கொள்கைகளை மிகு கடுமையுடன் தாக்கி மறுத்திருக்கின்றார். கபீர்தாசர் இந்திமொழியில் இயற்றிய செய்யுள் நூல்கள் பற்பல. இவர் இறந்தபின், இவர்தம் மாணாக்கர் இயற்றிய நூல்களும் இவரது பெயரால் வழங்கப்படுகின்றன. கபீர்தாசருடைய பாடல்கள் இந்தி மொழியில் உண்டான பிறகுதான், அதாவது சென்ற நானூறு ஆண்டுகளாகத் தாம் இந்தி மொழியின் ஒரு பிரிவுக்கு ஓர் ஏற்றமுண்டாயிற்று.

இனிக், கபீர்தாசருக்குப் பின், அவர்தம் மாணாக்கரான ‘நானாக்” என்பவர் ‘சீக்கிய மதத்தைப்' பஞ்சாபு தேயத்தில் உண்டாக்கினர். இவருடைய பாடல்கள், பஞ்சாபியும் இந்தி யுங் கலந்த ஒரு கலப்பு மொழியிற் பாடப்பட்டிருத்தலால், இந்தியைப் பயிலும் நம் நாட்டவர் இவருடைய பாடல் களையும் எளிதிலே அறிந்துகொள்ளல் இயலாது.

இனி, இற்றைக்கு 480 ஆண்டுகளுக்கு முன், தர்பங்கா மாகாணத்தின் கண்ணதான 'பிசபி' என்னும் ஊரில் வித்யாபதி தாகூர்' என்னும் பெயர்பூண்ட வைணவர் ஒருவர் தோன்றிக், கிருஷ்ணமதத்தை உண்டாக்கி, அதனை வடகீழ் நாடுகளில் மிகவும் பரவச் செய்தனர். இந்தி மொழியின் மற்றொரு பிரிவான மைதிலி' மொழியில் இவர், கண்ண னுக்கும் அவன் காதலி இராதைக்கும் இடையே நிகழ்ந்த காதல் நிகழ்ச்சிகளை விரித்துப் பல பாடல்களைப் பாடி

யிருக்கின்றார். இப்பாடல்களையே பின்னர் 'பங்காளி' மொழியிற் ‘சைதன்யர்' என்பார் மொழி பெயர்த்து, அவற்றை வங்காள தேயமெங்கும் பரவ வைத்தனர். இது கொண்டு, இந்திமொழி வங்காள தேயத்திலுள்ளார்க்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/220&oldid=1584467" இலிருந்து மீள்விக்கப்பட்டது