உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் 17

மட்டுஞ் சோம்பாமலாராய்ந்து பார்த்து, எது தழுவத்தக்கதோ அதைத்தழுவுவர், தழுவத் தகாததை விலக்குவர். வெறும் வெளி மினுக்கையும், க்கையும், வெற்றாரவாரத்தையுங்கண்டு அவர் ஏமாந்து விடுவதில்லை. அறிவிலும், ஆராய்ச்சிலுமே அவர்கள் தமது காலத்தைப் பயன்படுத்தி வருவதால், அவர்கள் பால் வீணான பேச்சுக்களும் நிகழ்வதில்லை. பிறர்பாற் குற்றங்கள் இருந் தாலும் அவற்றை அவர்கள் ஆரய்வதில்லை; பிறர்பாலுள்ள குணங்களைமட்டும் ஆராய்ந்து அவற்றுக்காக அவரைப் பாராட்டுவதுடன், அவரால் தாமும் உலகமும் பயன் படுதற்கான ஒழுங்குகளெல்லாஞ் செய்வர் அதனால், மேல் நாட்டவரில் நற்குணமும், நல்லறிவும் நன்முயற்சியும் உடைய வர்கள் சீருஞ்சிறப்பும் எய்தித் தாமுந் தம்மைச் சேர்ந்தவரும் வறுமையும், கவலையும் இன்றி உயிர்வாழப் பெற்று, நாடோறும் ஆயிரக்கணக்கான புதுமைகளையும், ஆயிரக் கணக்கான பொறிகளையும் (இயந்திரங்களையும்) ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகளையும், ஆயிரக்கணக்கான கல்விச் சாலைகளையும், ஆயிரக்கணக்கான சொற்பொழிவு மண்டபங் களையும், ஆயிரக்கணக்கான கலையறிவுக் கழகங்களையும், இன்னும் இவைபோல் நம் சொல்லளவில் அடங்காத பலப்பல நலங்களையுந் தாமிருக்கும் நாடுகளிற் பரவச்செய்து வருவதோடு, தாஞ்செல்லும் பிறநாடுகளிலும் அந்நலங்களை யெல்லாம் பரப்பி வருகின்றனர்.

இனி, நம் நாட்டவர்களுக்கோ அறிவாராய்ச்சியில்லாமை யோடு ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை. தமக்குத் தம் மனைவி மக்களும், நெருங்கிய உறவினருமே உரியனரெனவும், மற்றையோரெல்லாந் தமக்கு வேறானவரெனவும், தாமுந் தம்மினத்தவரும் நன்றாயிருத்தலே தமக்கு வேண்டுந் தம்மவரல்லாத பிறர் எக்கேடுகெட்டா லென்ன, எத்தெருவே போனாலென்ன எனவும் நினைந்து, பிறர் நலத்தைச் சிறிதுங் கருதாதவர்களாய் இருக்கின்றனர்,

தன்னலங்கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத் தமிழ்நாட்டவர்க்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும் அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளுங் கணக்கிட்டுச் சொல்லல் இயலாது. நாலு பேர் ஒன்று சேர்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/247&oldid=1584502" இலிருந்து மீள்விக்கப்பட்டது