உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

225

பொருள் என்றும் அழியாது; செல்வமோ சிலகாலத்தில் அழிந்துபோம்; கல்விப்பொருள் ஒருவனது அறிவைப் பற்றிக் கொண்டு எழுமை ஏழு பிறப்பும் அவனுக்குற்ற துணையாய்ச் செல்லும்; செல்வமோ அதனையுடையானுக்கு இந்தப் பிறவியிலேயே துணையாகாமற், பிறராற் கவரப்பட்டு, ஒரோ வொருநாள் அவனுயிரையுந் தொலைத்தற்கு ஏதுவாயிருக்கும்; கல்விப்பொருள் இந்த உலகத்திலும், இங்குள்ள உயிர்களிலும் உள்ள வியப்பான உண்மைகளை விளங்கச் செய்வதுடன் இவற்றிற்கு உள்ளுமாய்ப் புறம்புமாய் நிற்கும் இறைவன் தன் அருளுண்மைகளையும் விளங்கச்செய்து நமக்குப் பேரின் பத்தைத் தராநிற்கும்; செல்வப் பொருளோ தன்னையுடை யானைப் பெரும்பாலுந் தீய துறைகளிற் புகுத்திச் சிலகாலத்தில் அவன் சிற்றின்பத்தினையும் நுகரவொட்டாமல் அவனை நோய்வாய்ப்படுத்தி, அவனைவிட்டு நீங்கி அவனை விரைவில் மாய்க்கும். ஆகையாற் கல்விப்பொருள் சிறந்ததோ, செல்வப் பொருள் சிறந்ததோ என்பதைச் சிறிது எண்ணிப்பாருங்கள்! கல்விப்பொருள் ஒன்றுமே, நமக்கும் நம்மைச் சேர்ந்தார்க்கும் நலம் பயப்பதன்றிச் செல்வப் பொருள் அங்ஙனம் நலம் பயப்பதென்பது சிறிதுணர்வுடையார்க்கும் விளங்கு மன்றோ? ஆகவே, கல்விப்பொருளின் பொருட்டுச் செல்வப் பொருளைப் பயன்படுத்த வேண்டுமே யல்லாமற் செல்வப் பொருளைப் பெறும்பொருட்டே கல்விப் பொருளைப் பயன் படுத்துதல்

ஆகாது.

ஆனால், நம்நாட்டவர் நிலை எத்தன்மையதா யிருக்கின்ற தென்பதை எண்ணிப்பாருங்கள்! நம்மவரிற் பெரும்பாலோர்க்குக் கல்விகற்பதிற் சிறிதும் விருப்பமேயில்லை. கற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுந் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தாற் போதுமென்றும், அதுவும் வேண்டாங், கையெழுத்துப் போடத் தெரிந்தாற் போதுமென்றும் எண்ணி அங்ஙனமே நடப்பவர் களாய் இருக்கிறார்கள். இன்னும் பலர் "தமிழ்ப்படித்து என்ன வாரிக்கொள்ளப் போகிறான்? படியாதவர்களில் எத்தனையோ பேர் பொருள் தேடிச் செல்வர்களாக இல்லையா” என்று வாய் கூசாது பேசிப் போகின்றனர். இன்னும் பலர், “ஆங்கிலம் படித் தாலும் பெரிய வேலை கிடைக்கும். பெரிய அதிகாரங் கிடைக்கும், ஆங்கிலம் படித்துப்பட்டம் வாங்கின மாப்பிள்ளைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/250&oldid=1584505" இலிருந்து மீள்விக்கப்பட்டது