உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் -17

அய்யாயிரம் பத்தாயிரத்துடன் பெண் கிடைக்கும்” என்று எண்ணுவதுஞ் சொல்லுவதுஞ் செய்து, இவைகளுக்காகவே தம் மக்களை ஆங்கிலம் பயிலச் செய்கின்றார்கள்.

இசைந்த

துவக்கத்திலிருந்தே இந்த எண்ணத்தோடு ஆங்கிலங் கற்கின்ற பிள்ளைகள், அதனில் தேர்ச்சி பெற்றுப் பட்டங்கள் வாங்கினவர்களாய் வெளிவந்தவுடன், பொருள் வருவாய்க்கு வேலைகளைப் பெறுவதிற் கண்ணுங்கருத்து முடையராகின்றார்களேயல்லாமல், மேலுங் கல்வியறிவைப் பெருக்கவேண்டுமென்னும் எண்ணம் உடையராக காணப்பட ல்லை. அரசியற்றுறைகளிலோ, நீராவி நிலையங்களிலோ, ஆங்கில வணிகர் தந்தொழிற்சாலைகளிலோ, இன்னும் இவை போன்ற பிறவற்றிலோ பெரிய பெரிய அலுவல்களில் அமர்ந்து பிறர்க்கு ஊழியஞ்செய்து பொருள் ஈட்டுவதிலேயே பெரு முயற்சியுடையவர்களாய் இருக்கின்றார்கள்,

வ்வலுவல்களைப் பெரும்பொருட்டு, அவற்றிற்குத் தலைவர்களாயிருப்பவர்கள் கேட்கும்அளவெல்லாந் தாழ்ந்து கைக்கூலி கொடுக்கின்றார்கள்; அதுமட்டோ, அத்தலைவர்கள் விரும்புகிறபடியெல்லாம் மானக்கேடான செயல்களைச் செய்வதற்கும் முன் நிற்கின்றார்கள்! பொருள் வருவாயையுந் தலைமையையுமே பெரியதாக நினைத்து, இவ்வாறெல்லாம் பெரும்பாடுபட்டுத் தாம் விரும்பிய வேலைகளை அடைந்த பிறகாவது இவர்கள் எண்ணங் கல்விப்பயிற்சியிலுங் கடவுள் வழிபாட்டிலும் பிறர்க்குதவி செய்வதிலும் நாட்டுக்கு நலந் தேடுவதிலுந் திரும்புகின்றதோ வென்றால், இல்லை இல்லை. தாமிருக்கும் வேலையினளவுக்கு வருஞ் சம்பளத்தில் மனநிறைவு பெறாமல், தாம் தமக்கு மேலுள்ளவர்கட்குக் கைக்கூலி கொடுத்தது போலவே தாமுந் தமக்குக் கீழுள்ளவர்பாலுந், தமது தலைமைக்குக்கீழ் அடங்கி நடக்கும் ஏழை யெளியவர்கள் பாலுமிருந்து ஓயாமற் கைக்கூலி வாங்கின வண்ணமாயிருக் கிறார்கள்.

அங்ஙனம் ஏழை எளியவர்கள் அழ அழ அவர்கள் வயிற்றில் அடித்துச் சேர்க்கும் பொருளையாவது அவர்கள் நல்வழியிற் செலவு செய்கின்றார்களோவென்றால் அதுவு மில்லை. இரப்பவர்க்கு ஒரு கை முகந்த அரிசி தானுங்கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/251&oldid=1584506" இலிருந்து மீள்விக்கப்பட்டது