உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மறுப்புக்கு மறுப்பு

227

இசையார்; கற்பவர்க்குங் கற்றவர்க்கும் ஒரு காசுதானுங் கொடார் மற்றுந் தம் மனைவி மக்கட்குப் பொற்சரிகை பின்னிய பட்டாடைகள் வாங்கிக் கொடுப்பதிலும், வைரம் இழைத்த உயர்ந்த அணிகலங்கள் செய்வித்து அணிவதிலும், அவர்கள் புழங்குதற்குப் பொன் வெள்ளிகளிற் சமைத்த ஏனங்கள் வாங்கிச் சேர்ப்பதிலும், அவர்களுந் தாமும் ஏறி ஊர் சுற்றுவதற்குக் குதிரை வண்டிகள்; இவற்றினும் விலையுயர்ந்த உந்து வண்டிகள் அமைத்துக்கொள்வதிலும், நாடக சாலைகள் குதிரைப் பந்தயங்கள்; வட்டக் காட்சிகள் சென்று காண்பதிலும் இன்னும் இவைபோன்ற வெற்றார வாரங்களிலுமாகத் தாம் ஏழை குடி மக்களிடமிருந்து பகற்கொள்ளையடித்த பெருந்தொகையான பொருளைச் செலவு செய்து விடுகின்றார்கள். இன்னும் பலர் சாராயங் குடித்தும், ஊன் தின்றும், வேசியரை மருவியும் அப்பொருளைப் பாழாக்குகின்றார்கள். மற்றும் பலர், அப் பொருளை கடன் கொடுத்து வட்டி மேல் வட்டி வாங்கியும், அம்முகத்தால் ஏழை எளியவர்களின் நிலங்கள், வீடுகள், பண்டங்களைக் கவர்ந்துந் தமது பொருளை ஆயிரம் நூறாயிரங் கோடி என்னும் பேரளவாகப் பெருக்குவதிலேயே முனைந்து நிற்கின்றார்கள்.

இவ்வாறாக, ஆங்கிலங் கற்கும் இந்நாட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், அவர் எல்லாம் மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கே தாம் கற்ற கல்வியைக் கருவியாக்கி, ஏழைக்குடி மக்களைப் பாழாக்குகின்றார்கள். இந்நிலையிற் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் ஒத்தவர் களாகவே யிருக்கின்றார்கள்.

தந்நலந் தேடுவதிலேயே நாட்டம் வைத்திருக்கும் இவர்கள், அவைக்களங்களில் மேடைமேலேறிப் பேசும்போது மட்டும் ஏழை மக்களுக்காகக் கண்ணீர் விட்டுக் கதறுகின்றார் கள்! ஃது எதனை ஒத்திருக்கின்றதென்றால், “ஆடு நனை கிறதேயென்று கோநாய் குந்தியழுததையே” ஒத்திருக்கின்றது. மேடைமேல் இவ்வளவு , வ்வளவு, இரக்கங்காட்டிப்பேசிய அவர்கள் வீட்டுக்கு, ஏழை இரவலர்கள் சென்றால் அவர்களை ஏசித் துரத்துகின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/252&oldid=1584507" இலிருந்து மீள்விக்கப்பட்டது