உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் 17

இந்த வகையிற் பார்ப்பனரைவிடப் பார்ப்பனரல்லாதாரே மிகக்கொடியராயிருக்கிறயார்கள். யாங்ஙனமென்றால், உயர்ந்த

நிலைகளிலுள்ள பார்ப்பனர்கள் தம் இனத்தவரல்லாதாருக்கு ஏதோருதவியுஞ் செய்யாவிடினுந், தம்மினத்தவர்களில் ஏழை களாயிருப்பவர்க்கு எல்லா வகையான உதவியுஞ் செய்யக் காண்கின்றோம். மற்றும், பார்ப்பனரல்லாதாரில் உயர் நிலைகளிலிருப்பவர்களோ ஏழைக் குடிகட்கு ஏதொரு நன்மையுஞ் செய்யக் காண்கிறோம்; நன்மை நன்மை செய்யா தொழியினும் தீமையேனுஞ் செய்யாதிருக்கிறார்களோ வென்றால் அப்படியுமில்லை. எளியவர்களைத் துன்புறுத்தியும், அவர்கள் பொருளைத் “தோலிருக்கச் சுளை விழுங்குவது” போல் விழுங்கியும் வந்தாற்றானே, தாம் வல்லாண்மை வாழ்க்கை செலுத்தலாம்.

செல்வர்களால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றங்களில் முறையிடச்செல்லும் எத்தனை எளிய மக்கள், தாம் நடுவர்க்குக் கைக்கூலி கொடுக்க இடமில்லாமையின், அங்கும் நடுவிழந்து, ஓலமிட்டு அழுகின்றார்கள்! ஆங்கிலர் நடுவராயிருப்பின், அவரால் எத்திறத்தவரும் முறையாக வழக்குத் தீர்க்கப்பட்டுத் தங்குறை தீர்க்கின்றனர். நம் நாட்டவர் அந்நிலைகளில் ருப்பிற், பெரும்பாலும் அவரால் நடுவாக வழக்குத் தீர்க்கப் படுதல் இல்லை; அவர்க்குக் கைக்கூலி கொடுப்பார் பக்கமே வழக்கு நன்றாய் முடிகின்றது இதனினும் பெருங் கொடுமை யாதிருக்கின்றது! காவலாக இட்ட வேலியே பயிரைத் தின்றாற்

பயிர் விளைவதெப்படி?

D

ங்ஙனம் பொருளையே பெரிதாய் நினைந்து நடுவு தவறி, எளியவர்களை வருத்திப் பொருள் சேர்க்கும் ஆங்கிலங் கற்ற நம்மனோர் பார்ப்பனரல்லாத நம்மனோர்க்கு இவ்வா றெல்லாந் தீங்கிழைப்பினும், பார்ப்பனர் காலில் விழுவதற்கும் அவர்க்குத்தாம் சேர்த்த பொருளை மிகுதியாக வழங்குவதற்கும் மட்டும் அவர்கள் சிறிதும் பின்வாங்குகிறார்களில்லை.

இவர்கள் ஆங்கிலங்கற்றது வயிற்றுப்பிழைப்புக்கும் பெருமைக்குமே யல்லாமல், ஆங்கிலத்திலுள்ள விழுமிய அறிவாராய்ச்சியைப் பெறுவதற்கு அன்றாகையால், இவர்கள் தம் வீட்டிலுள்ள அறிவில்லாப் பெண் மக்களின் சொல்லுக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/253&oldid=1584508" இலிருந்து மீள்விக்கப்பட்டது