உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

229

ஆராய்ச்சியில்லாப் பேதைகளான தன் சுற்றத்தார் சொல்லுக்குங் கட்டுப்பட்டவர்களாகித் தம் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிற்கும் பார்ப்பனர்களை வரவழைத்து, அவருக்கு அவர் வேண்டிய பொருளை வழங்கி அவர் காலிலும் விழுகின் றார்கள்! ஒரு வேளை நல்ல சோறுகூடக் கிடையாமற் பட்டினியும் பசியுமாய்க்கிடந்து வாடி வதங்கும் ஏழைகள் முகத்தை ஏறெடுத்தும் பாராமற்பேதைமை வயப்பட்டு வறுமையறியாத பார்ப்பனர்க்கும், ஆரவாரக் கொண்டாட்டுகட்குஞ் சிறு தெய்வ வெறியாட்டுகட்கும், அழிவழக்குகட்குந் தமது பொருளைக் கணக்கின்றிச் செலவிடும் நம்மனோரின் நிலை, எண்ணுந் தோறும் நடுக்கத்தை விளைவிக்கின்றது!

இனி, ஆங்கிலமாவது தமிழாவது கல்லாதிருந்தும் பழைய நல்வினைப் பயனாற் பெருஞ் செல்வர்களாகவுஞ் சிற்றரசர் களாகவும் வாழ்வார் நம் நாட்டிற் பெருந் தொகையினராய் இருக்கின்றனர். இவர்களுடைய செல்வச் செருக்கையும், இவர்கள் தங்கீழ் உள்ள ஏழை மக்கட்குச் செய்யுங் கொடுமை களையும் நாம் எண்ணிப்பார்ப்போமானால், நமதுள்ளம் இன்னும் மிகுதியாய் நடுங்கா நிற்கும். செல்வர்கள் இல்லங் களிலும் இருக்கும் பொற்சரிகை பின்னிய பட்டாடைகளிலும், அவர்களும் அவர்களின் மாதரும் அணிந்து கொள்ளுங் கல்லிழைத்த நகைகளிலும் அவர்கள் புழங்கும் பொன் வெள்ளி ஏனங்களிலும், அவர்கள் ஏறிச்செல்லும் ஊர்திகளிலும், இன்னும் இவைபோன்ற வெளிமினுக்குகளிலும் அவர்கள் சலவு செய்திருக்கும் பொருளைக் கணக்கிடப் புகுந்தால், அவை நூறாயிரக் கணக்கா யிருக்கும்.

இனிச் சிற்றரசர்களாகிய ஜமீன்தாரர்களின் அரண்மனை களிலும் இங்ஙனமே ஆடைகளிலும் அணிகலங்கள் முதலிய வற்றிலும் மடங்கி வறிதே கிடக்குஞ் செல்வப் பொருளைக் கணக்கிடப்புகுந்தால் அவை கணக்கிலடங்கா.

ங்ஙனமே, சைவ வைணவ சுமார்த்த மாத்துவ மடங்களில் ஏதொரு நற்பயனுமின்றி அடங்கிக் கிடந்து மங்கும் பெரும் பொருட்டிரளுங்கணக்கில் அடங்கா.

இவ்வாறெல்லாம் இவர்கள் கையில் முடங்கிக் கிடந்து அவியும் பெரும் பொருட் குவியல்களெல்லாம், இவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/254&oldid=1584509" இலிருந்து மீள்விக்கப்பட்டது