உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் -17

விட்டு நீக்கிப் பொதுமக்கட்குப் பயன்படுநிலைமையை யடையுமானால், இவ்விந்திய நாட்டில் வறுமையும் நோயும், அறியாமையுந் தலைக்காட்டுமா?

இப்பெரும் பொருள்கொண்டு நூறாயிரக்கணக்கான கல்விச்சாலைகள் நாடெங்குந் திறப்பிக்கலாம். மிக வறியரா யிருப்பவர்கட்கு அவர் வறுமை நீங்கும் மட்டும் உணவு காடுக்கும் அறச்சாலைகள் எங்கும் அமைக்கலாம். ஏழை யெளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும், நூல்களும் வாங்கிக்கொடுத்துச் சம்பளம் வாங்காமற் கல்வி கற்பிக்கலாம். உழவுத்தொழில் கைத் தொழில்களை அறிவாராய்ச்சியோடு செய்து, இப்போது பெறும் பயனிலும் நூறு மடங்கு ஆயிர மடங்கு மிகுதியான பயனைப்பெறலாம். வாணிகத்திற் பொய்யும் புரட்டுங் கலவாமல் அதனை நேர்மையோடு செய்து பேர் ஊதியத்தை யடையச் செய்யலாம், வை மட்டுமோ, இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகைவண்டித் தாடர்கள், மின்சார வண்டிகள், வானவூர்திகள் முதலியன வெல்லாம் அமைத்துக்கொள்ளலாம். நீர்வளமில்லாத நாடு நகரங்களுக்குக் குளங்கள் கூவல்கள் எடுப்பித்து நீர்ப்பீலிகள் வைக்கலாம். பொதுமக்கட்கு அறிவுஊட்டுங் கழகங்கள் நிலைபெறுத்தி, அவற்றிற் கலைவல்ல அறிஞர்களை அமர்த்த லாம்; அவர்கள் கடவுளைப் பற்றியும், உயிர்களைப் பற்றியும் உலகங்களைப்பற்றியும் உலகியற் பொருள்களைப் பற்றியுங் குழாங்கொண்டு ஆராய்ந்து அறிவு பெறுதற்குக் கலை யாராய்ச்சி மன்றங்கள் நிறுவலாம்; அவர்கள் ஆராய்ந் தெழுதும் நூல்களுக்குத் தக்கபடி பொருளுதவி புரிந்து அவற்றை அச்சிட்டு நாடெங்கும் பரப்பலாம். ஆண்டுகடோறும் பன்னூறாயிரக் கணக்காய் மக்களுயிரைக் கொள்ளை காண்டுபோகுங் கொடிய நோய்களை வராமற்றடை செய்து மக்கள் வாழ்நாளை நீளச்செய்து அவரறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் மருத்துவக் கழகங்கள் எங்கும் அமைக்கலாம்.

எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையுந் தோற்று வித்து உயிர்கட்கு ஓயாமற் பேருதவி செய்து ஒரே முழுமுதற் கடவுளான ஒரு பெருந்தந்தையை அறியாமற், பிறந்து

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/255&oldid=1584510" இலிருந்து மீள்விக்கப்பட்டது