உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

  • மறுப்புக்கு மறுப்பு

231

பெருந்துன்பப்பட்டு இறந்த மக்களையும், மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களையுந் தெய்வங்களாக நினைந்து வணங்கும் பெருங்குற்றஞ் செய்வதோடு, வாயற்ற தீங்கற்ற ஏழை உயிர் களாகிய ஆடு, மாடு, கோழி முதலியவைகளைத் துடிதுடிக்க அறுத்து, அவற்றை அத்தெய்வங்களுக்குப் பலியாக ஊட்டி மீளா நரகத்திற்காளாகும் நம் பொது மக்களை அத்தீமையி னின்று விடுவிக்கலாம். சாதியென்றுங் குலமென்றும் வறை யறுத்துக் கொண்டு சிறுவர், சிறுமிகளை அளவிறந்த துயரக் கடலில் லில் அமிழ்த்திவருங் கொடிய செயல்களை ஒழித்து, அறிவும் நற்குணமும் நற்செயலும் அன்புமுடையாரை ஏ ஏதொரு வேற்றுமையுமின்றி ஒருங்கு கூட்டி வாழச்செய்யும் மக்கட் கூட்டுறவு மன்றங்கள் எங்கும் நிலைபெறுத்தலாம். ஒரு முழு முதற் கடவுளை எல்லாருந் தடையின்றிச்சென்று வழிபட்டு மகிழுந் திருக்கோயில்கள் எங்கும் எடுப்பிக்கலாம்.

இன்னும் நம் மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு ன்றியமையாது வேண்டிய இன்னும் எத்தனையோ உயர்ந்த ஏற்பாடுகளையெல்லாஞ் செய்விக்கலாம்! இவ்வளவு நலங் களுக்கும் பயன்படுதற்குறிய கோடி கோடியான பெரும் பொருட் குவியல்கள், நம் நாட்டுச் செல்வர்களிடத்துஞ் சிற்றரசர்களிடத்தும் அரசர்களிடத்தும் மடத்தலைவர் களிடத்துஞ் சிறிதும் பிறர்க்குப் பயன்படாதவாறாய் மடங்கி மங்கிக்கிடக்கையில் அப்பொருட்டிரளை அவர்கள்பால் நின்றும் விடுவித்துப் பொதுமக்கட்குப் பயன்படுந் துறையில் இறங்கி முயலாமல் நம் நாட்டுத் தலைவர்கள் “நம் நாட்டுப் பொருள் மேல்நாட்டுக்குப் போய்விடுகின்றதே!" என்று சொல்லி, ஆராய்ச்சியறிவு சிறிதுமில்லாத சாதி வேற்றுமைச் சமய வேற்றுமைப் படுகுழியினின்றும் ஏற விருப்பமில்லாத நம் இந்திய மக்களை வீணே கிளப்பிவிட்டு, இந்நாட்டுக்குப் பலவற்றாற்பெருந் தீமைகளை உண்டுபண்ணுதல் நன்றாகுமா? என்பதனை எண்ணிப் பாருங்கள்.

நம் நாட்டவர் கையிற் பொருள் கிடைத்தால் அது நம் பொதுமக்கட்குப் பயன்படப் போவதில்லை! நகைக்குந், துணிக்கும், ஊர்திகட்குஞ், சாதி இறுமாப்புச் சமய இறுமாப்பு களைப் பெருக்குதற்கும், ஏழை எளியவர்களைக் கொடுமையாக நடத்துதற்குந், தீயவொழுக்கங்களை மிகுதி செய்தற்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/256&oldid=1584511" இலிருந்து மீள்விக்கப்பட்டது