உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் 17

பூட்ஸ்களை உச்சந்தலையில் இனியும் தாங்கிக் கொண்டே இருங்கள் என்பதை மறக்காமலிருப்பதற்குத்தானே?

பார்ப்பனரல்லாத பல பண்டிதர்கள் இதிகாச புராணங் களைப் பிரசங்கம் செய்கிறார்கள். சமய ஆச்சாரியாரின் சரித்திரங்களையும் பக்தியோடு சொல்லுகிறார்கள். அந்தக் கூட்டங்களில் பார்ப்பனர்களைக் காண்பதில்லையே அது ஏன்? “சூத்திரன் சொல்லுவதைக் கேட்கலாமா? ஆகாதே" என்று பார்ப்பனப் பெண்களும் சொல்லுகிறார்களே அது ஏன்? பார்ப்பாரல்லாதவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்கள்

என்பதை ஒத்துக்கொள்ளாமலிருக்கத்தானே?

தேவாரப்

சிவன் கோவில்களில் பார்ப்பனர்கள் பாராயணத்திற்குமுன் பிரசாதம் வாங்கிப்போக அரும்பாடு படுகிறார்களே அது ஏன்? தேவாரத் திருவாசகத்தைப் பண்டாரப் பாட்டென்கிறார்களே அது ஏன்? அப்பர் சுவாமிகளுக்குப்பின் வேதம் சொல்லுவதற்கு மறுப்பதும் பின் அதிகக்கூலி கேட்பதுமேன்?

தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள் பாட்டைப் போல உருக்கமான பாட்டுண்டா? பட்டணத்தடிகள், அருணகிரி நாதர் பாட்டைப்போல வைராக்கியமுடைய பாட்டுண்டா? இந்தப்பாட்டுகளைப் பார்ப்பனர்கள் நாடகக் கொட்டகை களில் பாடுவதேயல்லாமல் கோவில் சன்னதிகளில் பக்திக்காக எவரும் பாடுவதில்லையே அது ஏன்?

சுவாமி

விவேகானந்தர் மேல்நாடுகளில்

இந்து

ஜயமும்

சமயத்தைப் பெருமையாகச்சொல்லி அதில் பெற்றார். இவ்விட ம் வந்தவுடன் அவருக்குப் பூரண கும்ப மெடுக்கப்பட்டது. பிராமணனென்றால் இன்னவனென்றும் பிராமண தருமத்தையும், அவர்கள் செய்த சில குற்றங்களையும், இனிச் செய்யவேண்டியவைகளையும் சான்ன வுடனே அவர்பின் செல்லுவதை பார்ப்பனர்கள் நிறுத்தி விட்டார்கள். அது ஏன்?

மகாத்மா காந்தியைத் தோத்திரம் பண்ணினார்கள்; பச்சையப்பன் கலாசாலைப் பிரசங்கத்தைக் கேட்டவுடன் கும்பகோணத்துப் பார்ப்பனர்கள் கோபித்தார்கள். ஆலைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/277&oldid=1584532" இலிருந்து மீள்விக்கப்பட்டது