உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

251

காண்டிருப்பதாலும், சமயமோ சாஸ்திரமோ மனித பணக்காரர்கள்

கடமையோ

தெரியாத

பலர்

பார்ப்பனர்களிடம் பல காரணங்களால் வசப்பட்டுப் போவதாலும் பழக்க வழக்கத்தின் கொடுமைகள் இந்துலாவை விட்டுத் துலைவ தில்லை. இந்தியா சட்டசபையில் தீண்டாமை சட்டம் போனகதியைப் பார்த்தாலே இது விளங்கிவிடும்.

மற்றும் சர் ராஜா அண்ணாமலை செட்டியார் கலா சாலையில் அறிவுநூல் வகுப்பில் பார்ப்பனப் பிள்ளைகள் தவிர மற்ற ஜாதிப் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளுவதில்லையே அது ஏன்? பழைய சாஸ்திர சட்டத்தின் ஏற்பாடுதானே?

வியாபாரத்திற்கு வந்தவன், சாட்சி சொல்ல வந்தவன், தாசி வீட்டிற்கு வந்தவன், நாடகமாட வந்தவன், தலாலிக்கு வந்தவன், புதிதாக வேலைக்கு வந்தவன் இன்னும்பல வேலைக் காக வந்தவன் முதலிய பார்ப்பனர்களுக்கு திருவனந்தபுரம், கொச்சி புதுக்கோட்டை இன்னும் பல இந்து ராஜாக்கள் சத்திரங்களில் சாப்பாடு போடுவதும், மற்ற பசித்தவர்களுக்கு சாப்பாடு இல்லாமலிருப்பதும் ஏன்? பழைய சாஸ்த்திர சட்டந்தானே?

சமூகச் சீர்திருத்தத்தில் காங்கிரஸ் தலையிடாதென்றும், ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்க வேண்டுமென்பதே காங்கிரசின் முதல் வேலை என்று சத்தியமூர்த்தி அய்யர் சொல்லுவதும் ஏன்? பழைய சாஸ்திர ஆதாரம்கொண்டு மற்ற சமூகங்களை அடக்கிவிட வேண்டுமென்கிற அந்தரங்க எண்ண மல்லவா? சமயமென்றும், அவதாரமென்றும், ஆச்சாரி களென்றும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றைச் சொல்லி அடக்கினதுபோல போல இப்பொழுது தேசாபிமானமென்று அடக்கப் பார்க்கிறார்கள்.

இதிகாசப் புராணங்கள் தவிர மற்றவைகளைப் பாடமாகப் பள்ளியில் வைக்கப்படாதென்று இந்துப் பத்திரிகை தலையங்க மெழுதக் காரணமென்ன? இதிகாச புராணங்களில்தான் மற்ற ஜாதிக்காரர்களின் தலை பார்ப்பனர்களின் பாதத்திலிருக்கிறது. இந்து ராஜாங்கத்தில் பார்ப்பனர்களின் பாதக் குறடைத்தாங்கின தலைகள் ஆங்கிலேய ராஜாங்கத்திலும் பார்ப்பனர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/276&oldid=1584531" இலிருந்து மீள்விக்கப்பட்டது