உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் -17

அப்பீல் உண்டு, மன்னிப்புண்டு அவர்களையும் நியாய ஸ்தலத்தின் முன்னே இழுக்கலாம், தண்டனையுண்டு, வெட்கப் படுத்தலாம், அந்த வெட்கமும் வெருந்தன்மையின் மானத்திற்கு லெட்சணமென்றும் மதிக்கப்படும். அந்த காலத்து வேதஸ்மிருதி சட்டங்களிலோ அதில்லை. பிராமணர் எனப்பட்டவர்களுக்கு அடிபணியாவிட்டால் ஆக்கினைதான். அந்தச் சட்டத்தினால் பிராமணன் என்று சொல்லப்பட்டவன் தனது ஸ்தானத்தை முன் ஜாக்கிரதையாவே கெட்டிப்படுத்திக் கொண்டான். அதை என்றும் நிலைநிறுத்த ஜனங்களின் அறிவை ஒடுக்கிவிட்டார்கள். அறிவின் வேர்களை பார்ப்பன ரல்லாதாரிடமிருந்து பறித்து விட்டபடியால் இவர்களுக்கு சுதந்திரமாய் காரியம் செய்ய சாத்தியப்படவில்லை. பிறகு சூத்திரன் என்னப்பட்டவர்களின் தலை பிராமணன் எனப்பட்டவர்களின்

பாததூளியில் ஈடுபட்டிருப்பதைக்காக்க வேறு சிரமம் வேண்டியதில்லை

யாயிற்று.

6

இப்பொழுது நம்முடைய பிரிட்டிஷ் ராஜாங்கத்திலோ எந்த ஜாதிக்காரர்களுடைய விடுதலைக்கும் நல்ல வழிகாட்டும் அறிவுக்கதவுகளை அடைத்து விடவில்லை. ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பட்சாத்தாபமும் உண்டாகிறது. அதனால் இந்து வேதஸ்மிருதிகளிலுள்ள தலைவெட்டுவதும், ஈயத்தை ஊற்றுவதும், தொண்டையில் சிலாக்கு விடுவதும் கழுவேற்று வதுமான கொடுமைகளை கிரிமினல் சட்டத்தால் நிறுத்தி னார்கள். மற்ற இந்து லாவிலுள்ள பழக்கவழக்கமென்கிற அனியாயங்களை புத்தியுள்ள பிள்ளைகள் பிழைக்கட்டும் என்று ஜன சமூகத்திற்கே விட்டுவிட்டார்கள். வேதஸ்மிருதி புராணங்களை ஆதாரமாகக்கொண்டு எழுதினதே இந்துலா வாகும், சன சமூகத்தில் சமயோஜித விபகாரப் புத்தியுடைய வக்கீல்களும், அதிகாரிகளும், குமாஸ்தாக்களும், பார்ப்பனர் களில் அதிகமாகவிருப்பதாலும், புரோகிதன், குரு, ஆச்சாரி முதலியவர்கள் பார்ப்பனர்களாக விருப்பதாலும் வேதத்தால் சொல்லப்பட்ட பிராமணதாசி மக்களான சூத்திரர்களென்னப் பட்டவர்களில் சிலரும், தாழ்ந்த ஜாதிப் பெண்ணுக்கும் பார்ப்பன ஆணுக்கும் பிறந்தவர்களென்று சொல்லப்பட்ட வைசியர்களில் பலரும், தங்களை வைதீகர்களென்று நினைத்துக் கொண்டு பார்ப்பனர்களின் அடியைத்தாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/275&oldid=1584530" இலிருந்து மீள்விக்கப்பட்டது