உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மறுப்புக்கு மறுப்பு

249

சட்டப்பிரகாரம் பிர்மஞானத்தை விரும்பின சூத்திரன் தலையை வெட்டின தன் கையைப் புகழ்ந்தார்" என்றும், “கிருஷ்ணன் பிராமணர்கள் பாதத்தைப் பூஜித்தார்” என்றும், "தருமர் சதா பிராமணர்கள் சன்னதியிலேயே இருந்தா" ரென்றும் இதிகாசங்களிலெழுதப்பட்டு அதையே ராஜாக் களுக்கு உபதேசிக்கப்பட்டிருந்ததினாலும் 'பிராமணர்களும் க்ஷத்திரிய அரசர்களும் ஒற்றுமையோடு எந்த தேசத்தில் ஆட்சி புரிகின்றார்களோ வைசிய சூத்திரர்களின் பெயர் பிரதானமாக எந்த தேசத்தில் வெளிவருவதில்லையோ ா அத்தேசம் பரிசுத்த தேச” மென்று யஜுர் வேதத்திலெழுதப் பட்டிருப்பதாலும், மேற்சொன்ன சட்டங்களை நடத்தாத தேசத்தில் “தருமம்கெட்டு தேசம் அழிந்து விடும்” என்றும், ‘அந்தச சட்டத்தை நடத்தாத க்ஷத்திரியன் க்ஷத்திரியனுக்குப் பிறந்தவனல்லன் விபசாரத்தில் பிறந்தவன்” என்றும் சாஸ்திரங் களிலெழுதப்பட்டிருப்பதாலும், வேதம் கடவுளால் சொல்லப் பட்டதென்கிற நம்பிக்கை உண்டாக்கப் பட்டிருப்பதாலும், இதை நம்பாதவன் நாஸ்திகன் என்கிற தூஷணையாலும், “அந்த சட்டங்களை அலட்சியம் செய்த ராஜாக்களை எங்கள் தெய்வமான இந்திரன் கொன்று அழித்து விட்டார்” என்கிற வேத சுலோக பயத்தாலும் இந்து ராஜாக்கள் அந்தச் சட்டங்களை அமுல் நடத்தினார்கள். அந்த சட்டங்களுக்கும் அதன் கொடுமையான தண்டனைகளுக்கும் பயந்துதான் படிப்பு என்பதே போய்விட்டது; படிக்கவும் கூடாது படிக்க வசதியுமில்லை என்று ஆகிவிட்டது.

66

இப்பொழுதும்கூட கிராமங்களில் தாழ்ந்த ஜாதி யென்னப்பட்டவர்கள் வெள்ளை வேஷ்டியைக் கண்டால் சாமியென்று கும்பிட்டு டிச்சில் விழுவதெல்லாம் அப்படிப் பட்டபரம்பரை பயந்தானே? அதுபோல எந்தப் பார்ப்பானைக் கண்டாலும் வாங்க சுவாமி என்று கும்பிடுவது அந்தச் சட்டத்தை அனுபவித்த பரம்பரை பயத்தின் குணமேயாகும்.

நம்முடைய ஆங்கிலேய ராஜாங்கத்தைக் குற்றம் சால்லலாம், ஆங்கிலேயர்களை தப்புச் சொல்லலாம், விரோதப்பட்டால் அலட்சியப்படுத்தலாம், அளவுக்கு மீறினால் வழக்குண்டு, விசாரணையுண்டு, சாட்சியுண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/274&oldid=1584529" இலிருந்து மீள்விக்கப்பட்டது