உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

  • மறைமலையம் -17

மோட்ச உபதேசம் யெல்லோருக்கும் பொதுவென்று சான்ன ராமானுஜாச்சாரியாருக்குக்கூட ஒருதரம் பாஷாணம் வைத்தார்கள். ஒருதரம் கெங்கையில் தள்ளப்போனார்கள் என்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்கவேண்டுமா?

வால்மீகி ராமாயணத்திலில்லாத ஈஸ்பர நிச்சயத்தை கம்பராமாயணத்தில் இராமருக்கு ஏற்றி அந்த ராமர் பிராமணர் காலில் விழுந்து வணங்கினார் என்று கம்பர் எழுதி பார்ப்பனர் களை தோத்திரம் செய்ததி சய்ததினால்தான் கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டதே ஒழிய அப்படியில்லாமலிருந்தால் அன்றே கம்பராமாயணமும் கம்பரும் துலைக்கப்பட்டிருக்கும்.

பார்ப்பனர்களை பூஜிதர்களாகவும் மற்றவர்கள் என்றும் மை யர்களாகவிருக்கும்படியாகவும் எழுதி வந்த வித்வான் களிடம்கூட “அவன் இவ்வளவு படித்து விட்டானே” யென்கிற ஒரு கோபம்தானிருக்கும். உள்ளதை உள்ளபடி சொல்லி அவர்கள் மோசடிகளை ஒரு சிறிது சொன்னாலும் அவர்களைத் துலைத்தே விடுவார்கள். இது அவர்கள் பரம்பரை ஏற்பாடாகும்.

"சூத்திரன் வேதத்தைக் கேட்டாலும் படித்தாலும் ஈயத்தைக் காதில் ஊற்று, தொண்டையில் கொழுவை விடு, நெஞ்சில் ஆணிவைத்தடி” என்றும், “பிராமணனை குற்றம் சொன்னால் நாக்கை அறுத்துவிடு, கையை நீட்டினால் கையை வெட்டு” என்றும் கடவுளால் சொல்லப்பட்ட இந்து வேதஸ் மிருதிகளில் சொன்னவைகளும் இப்பொழுது நமக்குக் கதைபோலவிருக்கிறது. ஆனால் இதுதான் நிஜமாகவே ஆங்கிலேய ராஜாங்கத்திற்கு முன் நடந்துவந்த தருமச் சட்டங் களாகும். அந்த சட்டங்களின் அமுல்கள் அத்தனையும் நடத்தின ராஜாக்கள் தான் தெய்வங்களாகவும், அவதார புருஷர்களாகவும், தெய்வம் எதிர்கொண்டழைக்கப் பட்டவர் களாகவும் தெய்வலோகத்துப் புஷ்பமாரியைத் தாக்கினவர் களாகவும், அதி வீரர்களாகவும் இதிகாச புராணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களாவார்கள்.

இரக்கபுத்தியுடைய அநேக நல்ல ராஜாக்கள் கூட அந்தச் சட்டங்களை நடத்தாமலிருக்க மார்க்கமில்லாமல் செய்யப் பட்டிருக்கிறது. "விஷ்ணுவின் அவதாரமான ராமரே அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/273&oldid=1584528" இலிருந்து மீள்விக்கப்பட்டது