உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

247

இந்தப்படி அநேக காலமாகவே நடந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயே அரசாட்சியில்கூட இன்னும் இப்படிப்பட்ட அவர்கள் எண்ணங்கள் பிரயத்தனங்கள் நின்றபாடில்லை. கண்ணாடி மூடி எல்லைக்குள்ளே வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணாடியை தண்ணீர் என்று நினைத்து அதில்மோதி அந்த எல்லைக்குள்ளே சுற்றினபழக்கம் பெரிய தண்ணீர்த் தொட்டியில் போட்டாலும் தண்ணீரைக் கண்ணாடியென்று நினைத்து பழைய மூடி எல்லைக்குள்ளே எப்படி சுற்றுமோ அதுபோல, பழைய இந்து ராஜாக்களின் குறுகின களத்தில் தெய்வத்தின் பேரால்-சமயத்தின் கொடுமை யால்- சாஸ்த்திரத்தின் பாரபட்சத்தால், பழமொழிகளால்- கிரியை சடங்குகளால்-மனித உரிமையை மறந்துவிட்ட தன்மை தமிழர்களின் எலும்புக்குள் ஊறிக் கிடப்பதால், ஆங்கிலேய ராஜ்ஜியத்தின் விசாலமான களத்தில் வாழ்ந்தாலும் பார்ப்பன ரல்லாதார்களை பழைய பயம் விடுவதில்லை. ஆங்கிலம் படித்து ஆ ங்கிலம் படித்து அவர்கள் உடை உடுத்தி ஊன் உண்டு அவர்கள் மூக்குக்கண்ணாடியே போட்டுக்கொண்டாலும்

தெளிவுண்டாகவில்லை.

66

D

“சூத்திரன் கல்வியில், அறிவில் மேன்பாடு அடையக் கூடா” தென்று இந்து வேதத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதாரங் களிருக்கின்றன. அந்த ஆதாரங்களைக்கொண்டும் அது கடவுள் சொன்னதென்றும், ரிஷிகள் சொன்னதென்றும் இந்து அரசர் களுக்குப் போதித்து வசப்படுத்தி அவர்களால், இவற்றை எதிர்த்துப் பேசினவர்களையும் அநேக அறிவாளிகளையும் கொன்று அழித்தார்கள்.

மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் அவருடை ய குருவிடம் அறிவுநூல் என்று சொல்லப்படும் வேதத்திலுள்ள ஒரு வாக்கியத்திற்கு பார்ப்பனரல்லாத ஒரு வித்வான் பொருள் கேட்டதற்கு, உடனே குருவானவர் ராஜ்ஜியத்தின் அதிகாரத்தை ஒரு முகூர்த்த நேரம் பெற்று அரசு செலுத்தி அந்த வித்வானை கழுவில் போட்டு தலைக்குமேல் பத்து அங்குலம் கழு ஊசி வரும்படியாகச் செய்து "இதுதான் சூத்திரனுக்கு அறிவு நூலின் அர்த்தம்" என்று சொன்னாராம். இப்படி நடந்த சம்பவம் அனந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/272&oldid=1584527" இலிருந்து மீள்விக்கப்பட்டது