உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

அறிவுரைக்கொத்தின் ஆட்சேபணைக்கு

மூலகாரணம்

(கைவல்யம் குடி அரசில் எழுதுவது)

மறைமலையடிகள் என்கிற சுவாமி வேதாசலம் அவர் களால் எழுதிய அறிவுரைக்கொத்து என்னும் புத்தகத்தைப் பற்றின ஆட்சேபணை சமாதானம் நடந்து வருவது பத்திரிகை மூலமாக பலர் அறிவார்கள். ஆட்சேபணை உண்டாவதற்குக் காரணமென்ன என்பதை, முதலில் தெரிந்துகொண்டு பின் மற்ற பாகங்களில் செல்லுவோம்.

ச்

தமிழ்நாட்டில் தமிழர்களைச்

சூத்திரர்களென்று, எப்பொழுது சொல்லப்பட்டதோ அன்றுமுதல் தமிழர்களின் கல்வி கடவுளின் பேரால், சமயத்தின் ஏற்பாட்டால், சாஸ்த்திரத்தின் பிரமாணத்தால், ராஜாக்களின் கொடுந் தண்டனையால், தமிழர்களின் கல்வி தடுக்கப்பட்டு, தமிழர்கள் பார்ப்பனர்களுக்கும், நூல்களுக்கும், நூல்களுக்கும், சைகைகளுக்கும், எல்லைகளுக்கும், கற்பனைத் தடைகளுக்கும் தலைகுனிந்து பல தலைமுறையாய் தமிழில் வழங்கப்பட்டு இருந்த அறிவு நூலும் போய், வந்த நூலைப் படிக்க வழியுமில்லாமல் போயிற்று.

தப்பித்தவறிச் சிலர் கல்வியிலும் அறிவிலும் மேம்பாடு அடைந்திருந்தாலும் அதை வெளியில் காட்ட வேண்டுமானால் பார்ப்பனர்களைப் பூஜிதர்களாகக் கொண்டவர்களாகவும் அவர்கள் எழுதும் நூல்கள் அப்பூஜ்ஜியதையை ஒட்டியதாகவு மிருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் பேரில் பழிகொண்ட பல ஆட்சேபணைகளைக் கிளப்பி அவதூறு சொல்லி அடக்கி அழித்துவிடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/271&oldid=1584526" இலிருந்து மீள்விக்கப்பட்டது