உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

எது இழிவு?

பாரதி பாடலா- அறிவுரைக் கொத்தா?

(குடி அரசில் நீலாவதி எழுதியது)

சுவாமி வேதாசலமவர்களால் எழுதப்பட்ட அறிவுரைக் கொத்து என்னும் தொகுப்பானது காலேஜ் பிள்ளைகளுக்குப் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டு விட்டதில் பார்ப்பனப் பத்திரிகைகள் சகிக்கமூடியாத ஓலமிடுகின்றன. இவ்வோலம் எதற்காக என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் அவைகள் அப்பாடத்தைப் பாடப்புத்தகமாக வைத்தது தப்பு என்று மாத்திரம் ஒரே அடியாய் முகவுரை கூறுகின்றன. விலை அதிகமென்றும் ஒரு பத்திரிகை கூறுகிறது.

80 பக்கம் 100 பக்கம் உள்ள தாகூர் கவிகளின் புத்தகம், பர்னாட்ஷா புத்தகம் போன்றவைகள் 3-ரூபாய் 4-ரூபாயுக்கு விற்பனையாகும் விஷயம் இவர்கள் அறிந்திருந்தால் சுவாமிகள் புத்தகத்தின் விலையைப்பற்றி பொறாமைப்பட இடமேற் பட்டிருக்காது.

மற்றும், சுவாமிகளின் புத்தகத்தில் கண்ட இரண்டொரு விஷயம் மக்களை அவமானப்படுத்துவதாகவும், குறை கூறுவ தாகவும் தமிழ் மக்களுக்காக பார்ப்பன மக்கள் சிபார்சு பேசுகிறார்கள்.

இது, ஆடு நனைகின்றதே என்று ஓநாய் பரிதாபப் பட்டதற்கே ஒப்பாகும்.

உண்மையில் பார்ப்பனர்களுக்குப் பரிதாபம் இருக்கிறதாய் இருந்தால் சுவாமிகள் வாக்கியத்தில் எதையாவது சொல்லி அதைப் பொய் என்று ஆதாரத்துடன் விளக்கி இருந்தால், அதைப்பற்றி யாராவது கவனித்து ஏதாவது செய்யலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/279&oldid=1584534" இலிருந்து மீள்விக்கப்பட்டது