உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

257

(ஆனால் நன்றாய் போதைவஸ்துக்கள் அருந்துவாராம்) ஆனாலும் பார்ப்பனர்.

சுவாமிகளோ அல்லாதவர் அவர் எவ்வளவு பக்தி விஸ்வாசத்துடன் இருந்தாலும் அல்லாதவர். இதற்கு ஆ இவ்வளவு ஆர்ப்பாட்டமும் பிரச்சாரமும் செய்வது நியாயமா?

ஆச

தவிரவும், சுவாமி வேதாசலம் புத்தக மறுப்பு விஷயங் களைப்பற்றி தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்கள் அனேகர் வருத்தப்பட்டுத் தங்கள் வருத்தங்களைக் காட்டும் முறையில் கூட்டங்கள் போட்டுப்பேசி தீர்மானங்கள் அனுப்புகிறார்கள்; பலர் தனியாகவும் எழுதுகிறார்கள்.

பதுங்கிக்

ஆனால் தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்கள் ஒருவர்கூட இச்சமயத்தில் தலைகாட்டாமல் மூலையில் கிடப்பதின் மர்மம் நமக்கு விளங்கவில்லை.

சுயமரியாதைக்காரர்களைப் பார்ப்பனர்கள் வையும் போது இந்தப் பண்டிதர்களும் கூடச்சேர்ந்து பின் தாளம் போடுவதுபற்றி கவலை இல்லை. ஆனால் ஒரு பண்டிதரைப் பற்றி பார்ப்பனர்கள் விஷமமான பிரசாரம் செய்யும்போது கூடவா இவர்கள் இந்தமாதிரி கைகட்டி வாய்பொத்தி பக்தி காட்டவேண்டும் என்று கேட்கின்றேன்.

பண்டிதர்கள் என்றாலே ஒருவர்மீது ஒருவர் பொறாமை உள்ளவர்கள் என்று சொல்லக்கூடியது மெய்யாகிவிட்டது.

நாட்டார் எங்கே, நடேசனார் எங்கே, செட்டியார் எங்கே, முதலியார் எங்கே, பிள்ளைவாள் எங்கே, பெருமனார் எங்கே மற்றும் என்னமோ பட்டந்தாங்கிய தமிழ் வித்துவான்கள் எங்கே இப்பொழுது?

இந்தப் பார்ப்பனர் தயவு இல்லாமல் இந்த நாட்டில் ஒரு வித்வான்கூட பிழைக்கமுடியாத நிலை ஏற்பட்டதானது எல்லாவற்றையும்விட மிகமிகப் பரிதாபமான சேதியாகும். பெண்மக்களில் யாராவது பண்டிதர்களாக இருந்தால்கூட இவ்வளவு மோசமாய்ப் பயப்பட மாட்டார்கள் என்றே கருதுகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/282&oldid=1584537" இலிருந்து மீள்விக்கப்பட்டது