உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் 17

பெரியதுரை யென்னிலுடல் வேர்ப்பான் யாரானாலும் கொடுமை செய்வான்

பிள்ளைக்குப் பூணூலா மென்பான்- நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத்தின்பான்

சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்.

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு நாளெல்லாம் மற்றதிலே உழைப்பு பாயுங் கடிநாய் போலீசு- காரப் பார்ப்பானுக் குண்டிதிலே பீசு

சோரந் தொழிலாக்கொள் வோமோ- முந்தைச் சூரர் பெயரை அழிப்போமோ?

வீர மறவர் நாமன்றோ- இந்த

வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?"

இந்தமாதிரி தமிழ் மக்களைத் திருடர்கள் என்றும், பார்ப்பனர்களை நாயைவிடக் கேவலமாகவும், லஞ்சம் வாங்கு பவராகவும், ஏமாற்றுகிறவனாகவும், பேராசைக்காரனென்றும், பெரிய அதிகாரிகளைக் கண்டால் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றும், யாரையும் கொடுமைப் படுத்துவான் என்றும், பார்ப்பனர்களுடைய யோக்கியதைகளைப்பற்றி சொல்லுவதற்கே மனங்கொதித்தது என்றும் சொல்லி இருக்கிறாரே.

இந்தப் புஸ்தகத்தைப் பாடபுத்தகமாக வைக்கும்படி பார்ப்பனர்கள் சர்க்காரைத் தூண்டவில்லையா?

பாடப் புத்தகத்தை வைக்காததற்கு சர்க்கார்மீது குறைகூற வில்லையா, லக்ஷக்கணக்காக விற்ற இந்தப் புத்தகத்துக்கு இன்னமும் விலை 2-ரூபாய் 3-ரூபாய் என்று போட்டு தேசீயத்தின் பேரால் பிரசாரம்செய்து லக்ஷக்கணக்கான ரூபாய்கள் சம்பாதிக்கப்படவில்லையா? இன்னமும் அனேக புத்தகம் “பாரதியார் எழுதி வைத்து விட்டுப் போனவைகள்” என்கின்ற பெயர் கொடுத்துப் புதிய புதிய புத்தகம் வெளியாக்கி பணம் சம்பாதிக்கப்படவில்லையா?பாரதியார் பார்ப்பனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/281&oldid=1584536" இலிருந்து மீள்விக்கப்பட்டது