உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

போக்கிரித்தனமான புகார்

தென்னாட்டுக்கலா வல்லவருள் தலை சிறந்து விளங்கும் சுவாமி வேதாசலமென்னும் மறைமலை அடிகள் அவர்களைத் தமிழ் உலகமும், சிறப்பாக சைவ உலகமும் நன்கறிந்திருக்கும் என்பதில் யாருக்கும் அய்யமிருக்காது.

சுவாமிகள் ஒரு பெரும் ஆஸ்திகர் என்பதோடு தமிழ் பாஷையில் இணையில்லாத பண்டிதர் என்பதும் தமிழ் பாஷை யுடையவும். தமிழ் பாஷையின் வளர்ச்சியினுடையவும் எதிரி களும் அறிந்ததேயாகும். அதோடு மாத்திரமல்லாமல் சுவாமி கள் சுயமரியாதைக் கொள்கைக்கு மாறானவர் என்பதோடு சுயமரியாதைக் கொள்கையானது, மக்களுக்குக் கேடு விளை விக்கத்தக்கது” என்கின்ற அபிப்பிராயமும் உடையவர்.

அன்றியும் சுவாமிகளின் தோளானது ஒரு முப்பிரி நூலைச் சுமந்து இருக்குமானால் த்தென்னாட்டுப் பார்ப்பனர்கள் இன்று அவரை அகஸ்தியராக்கியிருப்பார்கள். ஏனெனில் அவரினின்று எத்தனையோ மடங்கு தாழ்ந்த ஞான முடையவர்கள் பருத்தி நூலைத் தாங்கிய “பண்பி' னாலேயே மகாமஹோபாத்தியாயரானதோடு மாத்திரமல்லாமல் தமிழ்க் “கடவுளான சுப்பிரமணியனுக்கு” ஒப்பாகப் பேசியும், எழுதியும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.

66

உதாரணமாக இன்று தமிழ் பாஷையின் பேரால் பெரு நிதி திரட்டிக்கொண்டவரும்-பெரும் புகழ் அமைத்துக் கொண்டவரும், தமிழுக்குத் தாயகமெனவும் விளம்பரப்படுத்தப் பட்டு மகாமஹோபாத்தியாயர் எனப்பட்டம் சூட்டப்பெற்ற வருமான தோழர் உ. வே. சுவாமிநாதய்யர் அவர்களை ஒரு தட்டில் வைத்து சுவாமி வேதாச்சலமவர்களை மற்றொரு தட்டில் வைத்து நிறுக்கப்படுமானால், எத்தனை சுவாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/284&oldid=1584539" இலிருந்து மீள்விக்கப்பட்டது