உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் 17

நாதய்யர்களைப் போட்டால் சுவாமி வேதாச்சலம் வீற்றிருக்கும் தட்டை அசைக்கமுடியும்? என்பதை ஒவ்வொரு நேர்மையான ரு தமிழ் மகனும் தன் தன் நெஞ்சில் கையை வைத்து உண்மை உணர்வோடு பார்ப்பாரானால் நன்றாய் விளக்கிவிடும்.

சேர்த்து

தோழர் சுவாமிநாதய்யர் அவர்கள் வெகுகாலமாக பல தமிழ்ப்பெரியாரும், தமிழ் அபிமானிகளும் ம் வைத்திருந்த தமிழ் இலக்கியச் சுவடிகளையும், அவற்றிற்கு அவ்வப்போது பல அறிஞர்களும், பண்டிதர்களும் குறித்து வைத்திருந்த உரைகளையும், கருத்துக்களையும், கைப்பற்றி அவற்றில் பார்ப்பனர்களுக்கு பிரதி கூலமாகவும் இருந்த கூற்றுகளை மாற்றியமைத்து ஆரிய நூல்கள் போலவே எல்லாவற்றையும் பார்ப்பனீயத்துக்கு அரணாக்கிப் பதிப்பித்துப் பயன்பெற்றார் என்பதல்லாமல் தன் சொந்த மனோதர்மத்தில் யாவருக்கும் பயன்படும்படியான முறையில் ஏதாவது புத்தகமோ, வியாசமோ எழுதி இருக்கின்றாரா என்று பார்த்தால் நாம் கூறுவதில் உண்மை இல்லையா? என்பது செல்வனே விளங்கும்.

இருக்கின்றதா?

சுவாமி வேதாச்சலமவர்கள் அவ்வாறின்றி எத்தனையோ நூல்கள் தாமாகவே இயற்றியதுடன் தமதாராய்ச்சித் திறத்தால் எவ்வளவோ அறிய விஷயங்கள் கண்டுபிடித்து சகல மக்களுக்கும் பயன் படத்தக்க பல அரிய கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கிறார் என்பதைத் தமிழின் “கூற்றுவர்” களும் உணருவார்கள்.

இப்படிப்பட்ட சுவாமி வேதாசலமவர்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் விஷமப்பிரசாரம் செய்ய இப்போது ஏன் புறப்பட்டார்கள் என்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றலாம்; ஆனால் நமக்கு அது அதிசயமாய்த் தோன்றவில்லை. ஏனெனில் இதற்கு முன்னாலேயே செய்திருக்கவேண்டியவர்கள் இத்தனை நாள் எப்படி சுவாமி வேதாச்சலத்தைப்பற்றி விஷமப்பிரசாரம் செய்யாதிருந்தார்கள் என்பதுதான் ஒரு ஆச்சரியமாகத் தோன்றலாம்.

ஆனால் இரண்டைப்பற்றியும் ஆச்சரியப்பட வேண்டிய தில்லை என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் மறைமலை யடிகளைப்பற்றி நம் பார்ப்பனர்கள் முன்னும் விஷமப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/285&oldid=1584540" இலிருந்து மீள்விக்கப்பட்டது