உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

261

பிரச்சாரம் செய்துதான் வந்திருக்கிறார்கள். இப்போதும் செய்துதான் வருகிறார்கள், இனியும் செய்யத்தான் போகிறார்கள்.

எப்பொழுது அவர் சுவாமி வேதாச்சலமானாரோ அப்பொழுது முதலும், எப்பொழுது சுவாமி வேதாச்சல மவர்கள் சுவாமி வேதாச்சலமென்னும், மறைமலை அடிகள் என்பதாக ஆனாரோ அப்பொழுது முதல் அதைவிட அதிகமாகவும் அவரைப்பற்றி விஷமப்பிரசாரம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

நமது பார்ப்பனர்களுக்கு ஒருவர் விரோதியாக வேண்டு மானால் அவருக்கு தமிழ்ப் பாஷையில் இணையில்லாப் பற்றும், இணையில்லா ஞானமும் இருந்து வருவது ஒன்றே போது மானதாகும்.

அப்படிக்கிருக்க நமது சுவாமி வேதாசலமவர்களை பார்ப்பனர் எப்படி வெறுக்காமலும், பழித்துக் கூறாமலும் இருக்கமுடியும்.

இப்பொழுது சுவாமி வேதாசலம் அவர்களைப் பற்றி பார்ப்பனக் குழாத்திலும் அவர்களது பத்திரிகைகளிலும் நடந்துவரும் பிரச்சாரத்தை நாம் விஷமப்பிரச்சாரம் என்று மாத்திரம் சொல்வதல்லாமல் அதை ஒரு போக்கிரித்தனமான புகார் பிரச்சாரம் என்றுகூட ஏன் சால்லவேண்டி யிருக்கிறது?

னனில் சுவாமிகள் எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் ஒரு சிறிய நூலில் "தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள ஒரு கட்டுரையைக் குறிப்பாகக் கொண்டு அது தேச நலனுக்கும் மக்கள் நலனுக்கும் கேடானது என்பதாகச் சொல்லி அவரது பெயருக்கு இழுக்கு உண்ட ாகும் படியாக பி பிரசாரம் செய்கின்றார்கள்.

இரண்டு வாரகாலமாக இந்தப்பிரச்சாரம் பத்திரிகைகளில் அடிபடுவதோடு பல பார்ப்பனப் பத்திரிகைகள் இவ்விஷயத் திற்கு ஆக தலையங்கமும் உபதலையங்கமும் எழுதுவதோடு வழக்கம் போல் ஆங்காங்கு கூட்டம்போட்டு கண்டித்ததாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/286&oldid=1584541" இலிருந்து மீள்விக்கப்பட்டது