உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் 17

சூட்சிச் செய்திகளும் பிரசுரமாகின்றன. அவற்றுள் ஒரு பத்திரிகை “ விஷமத்தனமான புத்தகம்” என்கின்ற தலைப்பிலும், மற்றொரு பத்திரிகை

66

மறைமலை

அடிகள்

சுயமரியாதைக்கட்சியில் சேர்ந்துவிட்டார் என்பது ஆகவும், மற்றும் பல தங்களுக்கு தோன்றிய விதமாகவும் எழுதி அப்புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக வைத்தது பிசகு " என்றும் அதை எடுத்துவிடவேண்டும்" என்றும் எழுதி யிருக்கின்றன.

66

இந்தக் கூற்றுகளைத்தான் வேண்டுமென்றே செய்யப் படும் போக்கிரித்தனமான விஷமக்கூற்று என்று சொல்லித் தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஏனெனில் சுவாமி வேதாசலம் அவர்களால் எழுதப்பட்ட அறிவுரைக்கொத்து என்னும் புத்தகத்தில் "தமிழ் மக்களை இழிவுபடுத்தியும், அடிமைப்புத்தி ஏற்படும் படியும் துவேஷம் ஏற்படும்படியும் கட்டுரை எழுதி தமிழ் மக்களை கேவலப்படுத்தி” இருப்பதாக எழுதி ஓலமிடுகின்றன. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது, எதற்காக இப்படி ஓலமிட வேண்டியதாயிற்று என்பதற்கு உதாரணம் காட்டும்போது ஒரு பத்திரிகையானது

1."தமிழருக்குச் சுய அறிவு கிடையாது”

2. “ஒற்றுமைக் குணம் கிடையாது”

3. “கல்வியில் விருப்பம் கிடையாது

99

4. “மேல் நாட்டார் இங்கு வருமுன் உயர்ந்த பள்ளிக்கூடம் கிடையாது

5. “தமிழர்கள் கைக்கூலி (லஞ்சம்) கொடுக்கிறார்கள்” 6.“உத்தியோகம் பெற எதையும் செய்கிறார்கள்” அப்படி என்றால் என்ன? என்றும் கேட்கின்றது.

7. “பணம் சேர்ப்பதற்கே கல்வி கற்கிறார்கள்

என்ற வாக்கியங்களை எடுத்துக்காட்டி "இவை அடிமைப் புத்தியையும், துவேஷத்தையும் விளைவிக்கு மென்று சொல்லி இப்புத்தகத்தை பள்ளிப் பிள்ளைகள் படிக்கும்படியாக

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/287&oldid=1584542" இலிருந்து மீள்விக்கப்பட்டது