உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

அனுமதிக்கக் கூடாது” என்று எழுதி இருக்கின்றது.

263

இவற்றிற்கு சமாதானம் கூறியே இப்பத்திகைகளின் போக்கை போக்கிரித்தனமான புகார் கூறும் குணமுடையவை என்று எடுத்துக்கூற ஆசைப்படுகின்றோம்.

1. "தமிழருக்கு சுய அறிவு கிடையாது

""

தமிழருக்கு சுய அறிவு கிடையாது என்று எழுதியதில் ஏதாவது குற்றமிருக்கிறதா என்று கேட்கின்றோம்.

கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழ் மக்களில் நூற்றுக்கு 10 அல்லது 5 வீதமான மக்களுக்கு ஆவது சுயபுத்தி இருக்கின்றது என்று யாராவது கூறமுடியுமா என்று பந்தயம்கட்டி கேட்கின்றோம். ஒருவர் இருவருக்கு சுயபுத்தி இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது அச்சமுகம் முழுமைக்கும் இருப்பதாகக் கொள்ளக்கூடியதாகி விடுமா என்று கேட்கின்றோம்.

தமிழனுக்குப் புத்தியிருந்தால் அவன் “மோக்ஷமடைய மலத்தையும், மூத்திரத்தையும் சாப்பிடுவானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் அவன் தன் மகளைச் சாமி பேரால் பொட்டுக்கட்டி பார்ப்பனனுக்கு மாத்திரம் குறைந்த விகிதத்துக்குக் கலவிக்கு விடுவானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் பார்ப்பான் காலில் பவுன் பவுனாக நாணயம் கொட்டிக்கொடுத்து அவன் காலைக் கழுவின தண்ணீரைக் குடிப்பானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் காப்பிக் கடையில் எச்சைச் கிண்ணம் கழுவும் பார்ப்பானனையும் கூட்டிக் கொடுக்கும் பார்ப்பானனையும் சுவாமி என்று கூப்பிடுவானா?

சுய

தமிழனுக்குப் புத்தியிருந்தால் கடுகளவாவது புத்தியிருந்தால் அரிசி பருப்பு காய்கறியை பார்ப்பானுக்குப் படைத்து விழுந்து கும்பிட்டு “இவற்றை இறந்துபோன என் பெற்றோர்களுக்குக் கொண்டுபோய் சேர்த்து அவர்களை மோக்ஷத்திற்கு அனுப்புங்கள்" என்று சொல்லுவானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/288&oldid=1584543" இலிருந்து மீள்விக்கப்பட்டது