உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் -17

தமிழனுக்குப் புத்தியிருந்தால் தன்னை சூத்திரன் என்றும், தீண்டப்படாதவன் என்றும் அழைக்கின்ற- கருதுகிற பார்ப்பானை, சகோதரன் என்றும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளை என்றும் ஒரு தேசமக்கள் என்றும் கருதி அவனோடு நட்புக் கொள்வானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் தன்னைத் தொட்டால் பாவம், தன் பாஷையைக் கேட்டால் தோஷம். தன்னை கோவிலுக்குள் கடவுள் இருக்கும் அறையில் அனுமதித்தால் தோஷம் என்று சொல்லும் பார்ப்பானுடன் கூடிக்கொண்டு தமிழ் மக்கள் கழகத்தைக் கெடுக்கவும் அவர்கள் முன்னேற்றத் தைத் தடுக்கவுமான தொண்டைச் செய்து ஒற்றுழைத்து பார்ப்பானிடம் பிச்சை வாங்கிப் பிழைப்பானா?

தமிழ் மக்களுக்குப் புத்தியிருந்தால் கெஜம் 3 அணாவுக்கு விற்கும் அருமையான, நயமான துணியை வாங்கிக் கட்டுவதை விட்டுவிட்டு கெஜம் 6,7- அணாப்போட்டு ஆபாசத்துணியை தேசாபிமானம் என்னும் பேரால் வாங்கிக் கட்டிக்கொண்டுத் திரிவானா?

மோட்சத்திற்குப்போக மல மூத்திரங்களை உண்பதற்கும் சுயராஜ்யம்பெற கோணி ரட்டைக் கட்டுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதைக்கூட உணராமல் இருப்பானா? என்று கேட்பதோடு தமிழ்மக்களுக்கு பெரும்பான்மையான வர்களுக்குப் புத்தியும் இல்லை, சுயமரியாதையும் இல்லை என்பதற்கு இன்னும் இது போன்ற எத்தனை ஆயிரம் எடுத்துக் காட்டுகள் வேண்டுமானாலும் இருக்கின்றது என்றுகூறத் தயாராய் இருக்கிறோம்.

து

2. “ஒற்றுமைக் குணம் கிடையாது

""

தமிழ் மக்களுக்குள் ஒற்றுமைக் குணம் கிடையாது என்பது பொய்யா என்று கேட்கின்றோம்.

தமிழ் மக்கள் தாங்கள் பார்ப்பனரால் 1008 ஜாதியாராகப் பிரிக்கப்பட்டு பார்ப்பனர்களின் முன்னோர்களால் செய்யப் பட்டபுராண சரித்திர ஆதாரத்தோடு ஒவ்வோருவரும் கீழ்மேல் நிலை கற்பித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உண்பனை, தின்பனை, கொடுப்பனை, கொள்வனை, கூடி உறவாடுவன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/289&oldid=1584544" இலிருந்து மீள்விக்கப்பட்டது