உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மறுப்புக்கு மறுப்பு

L

265

முதலிய ஐக்கிய பாவமற்றவைகளைச் செய்துகொண்டு, ஒருவன் உண்பதை ஒருவன் பார்க்கக்கூட கூடாது என்கின்ற நியதி ஏற்படுத்தி, ஒவ்வொருவன் தொழிலையும் ஜாதியையும் இழிவாக்கி, ஒருவனிடம் ஒருவனுக்கு சரித்திர பூர்வமாகவே துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி செய்து, மக்களைப் பிரித்துவைத்து ஒரு சிறு சோம்பேறிக் கூட்டத்தார் நோகாமல் பாடுபடாமல் வயிர் வளர்க்கவேண்டி சதாகாலமும் எல்லாத் தமிழ் மக்களும் ஒருவரோடு ஒருவர் விருப்பற்று துவேஷத் இருக்கும்படி செய்து இருப்பது பொய்யென்று யாராவது சொல்ல முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.

துடன்

3. "கல்வியில் விருப்பம் கிடையாது

""

தமிழ் மக்களுக்குள் கல்வியில் விருப்பம் கிடையாது என்பது முழுதும் உண்மையற்றது என்று யாராவது சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம்.

இந்நாட்டுத் தமிழ் மக்களில் எத்தனைபேர் கல்வி கற்று இருக்கிறார்கள்? ஆரிய மக்களில் எத்தனைபேர் கல்வி கற்று இருக்கிறார்கள்? என்கின்ற கணக்கைப் பார்த்தால் சுவாமிகளின் வாக்கு எத்தனை பரிசுத்தமானது என்பது விளங்கும். இன்று பள்ளி உபாத்தியாயர்கள் பெரிதும் பார்ப்பனர்களானதி னாலும் பார்ப்பனர்களே தமிழ் மக்கள் பலருக்குக் குல குருவாய் இருப்பதாலும் இவ்விரு கூட்டத்தாரும் பார்ப்பனரல்லாத மக்களைப்பார்த்து "உங்களுக்குப் படிப்பு எதற்கு நீங்கள் மாடு கன்று மேய்த்து ஏர் உழுபவர்கள் தானே அன்றியும் “உங்களுக்கு படிப்பு வருமா உங்கள் நாக்குத்திரும்புமா” என்றெல்லாம் கேட்டு அவர்களது தன்னம்பிக்கையைக் கெடுத்து உற்சாகத் தைத் தடுத்து மனச்சோர்வை ஏற்படுத்தி மாடு மேய்ப்பதில் வண்டி ஓட்டுவதில் மோகத்தை உண்டாக்கி தமிழ் மக்களுக்கு கல்வி ஆசையில்லாமலும் கல்வி கற்கமுடியாமலும் செய்ததை எந்த ஒரு யோக்கியமான பார்ப்பனராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் பார்ப்பனரல்லாத மக்கள் சூத்திரராகவும், கீழ் ஜாதியாராகவும் கற்பிக்கப்பட்டு விட்டதாலும், பார்ப்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/290&oldid=1584545" இலிருந்து மீள்விக்கப்பட்டது