உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் 17

ரல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்படாது என்றும் கல்வி கற்பதும் கூடாதென்றும், மனுதர்ம நூல் முதலியவைகளில் இருப்ப தாலும் பார்ப்பனரல்லாதார் கல்வி கற்கவும் ஆசைப்படவும் முடியாமல் போனதோடு மற்றும் பார்ப்பனரல்லாத மக்கள் பெரிதும் 5-வயது முதலே பாடுபட்டால்தான் அவர்களது குடும்பம் வாழமுடியும் என்கின்ற மாதிரியில் வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டு விட்டதாலும், தமிழ் மக்களுக்கு கல்வி ஏற்படவும் ஆசை உண்டாகவும் இடமில்லாமல் போய்விட்டது என்பது பொய்யா மெய்யா என்று கேட்கிறோம்.

சமஸ்கிருத நீதி நூல் ஒன்றில் “குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன் இம்மூன்றையும் கிட்ட சேர்க்க லாகாது” என்று ரிஷிகள் வாக்கே இருக்க, இந்நிலையில் எந்தப் பார்ப்பனரல்லாதாரையாவது படிக்க பார்ப்பனர்கள் வசதி செய்து கொடுத்திருப்பார்களா என்றும் கேட்கின்றோம்.

4. "மேல்நாட்டார் இங்கு வருமுன்

""

மேல் நாட்டார் இங்கு வருமுன் உயர்ந்த பள்ளிக்கூடம் கிடையாது என்பது.

இப்ப ப்படி எழுதின அப்பத்திரிகையாவது ஆங்கிலேயர் வருவதற்கு முன்னோ அல்லது ஆரிய அரசர்கள் காலத்திலோ ஏதாவது பள்ளிக்கூட பள்ளிக்கூடங்கள் இருந்ததாக இரண்டொரு பள்ளிக்கூடத்தின் பெயர்களையாவது குறிப்பிட்டதா? அல்லது னியாவது குறிப்பிட முடியுமா? என்று கேட்கின்றோம். இதைப்பற்றி மிஸ்மேயோ அம்மையாரே எழுதி இருக் கிறார்கள்.பார்ப்பனரல்லாத மக்கள் படிக்கக்கூடாது என்றும், படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால்கூட காதில் ஈயத்தைக் காச்சி ஊற்றவும் ஏற்படுத்தியிருக்கும் சாஸ்திர தர்மங்களை யாரும் அறியார்கள் என்று நினைத்துக்கொண்டு இப்பத்திரிகை மனப்பால் குடிக்கின்றதா என்று கேட்கின்றோம்.

முதலாவது ஆங்கிலேயருக்கு முன் புஸ்தகம், காகிதம், சிலேட்டு ஏதாவது இருந்தது என்று யாராவது சொல்ல முடியுமா? பொதுமக்கள் படிக்கும் விஷயந்தான் ஏதாவது இருந்ததா?

குறள், தொல்காப்பியம் என்பதுபோல் ஏதோ சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/291&oldid=1584546" இலிருந்து மீள்விக்கப்பட்டது