உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

267

நூல்கள் இருக்கின்றதே அது எப்படி வந்தது என்று சொல்லு கின்றது அப்பத்திரிகை.

து மனதறிந்த அக்கிரமமான கேள்வியாகும். ஏனெனில் தால்காப்பியம், குறள் படித்தவர்கள் லட்சத்தில் ஒருவர் இருப்பார்கள் அதுவும் பள்ளிக்கூடத்தில் படிக்காமல் யாரோ ஒருவர் மூலம் ஒருவர் பாட்டாகக் கேட்டு நெட்டுருப்பண்ணி வைத்திருந்தால் அவர்கள் பெரிய வித்வான்களாக ஆகிவிடு வார்கள் அவ்வளவுதான்.படிப்பே ஒழிய பள்ளிக்கூடம் வைத்து எல்லாப்பிள்ளைகளும் அங்குபோய் எழுதுவது, படிப்பது என்பவைகள் தாராளமாய் இருந்ததாக எந்த ஆதாரத்திலும் எவராலும் சொல்லப்படவே இல்லை. அதனாலேயேதான் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் தாராளமாய் 10000க்கு ஒருவர் ருவர் படித்திருந்ததாகவும் காணப்படவில்லை.

5. “தமிழர்கள் கைக்கூலி கொடுக்கிறார்கள்

தமிழர்கள் கைக்கூலி கொடுக்கிறார்கள் என்பது.

பார்ப்பனர்கள் அதிகாரம் வகிக்க ஆரம்பித்தது முதல் கொண்டே இந்நாட்டில் லஞ்சம் எவ்வளவு தாராளமாகக் கடையில் கத்திரிக்காய், பீடி, சிகரெட் வாங்குவதுபோல் எவ்வளவு மலிவாக இருந்து வருகின்றது என்பதை நாம் எடுத்துச் சொல்லவும் வேண்டுமா?

L

பார்ப்பனர்களே அதிகாரிகளானதாலும், பார்ப்பனர் களே வக்கீல்கள், குமாஸ்தாக்கள் ஆனதினாலும், லஞ்சம் எவ்வளவானாலும் பெரிதும் எப்படியாவது பார்ப்பனர் களுக்கே போய்ச் சேரக்கூடியதாய் இருந்தாலும் லஞ்சத்தைத் தாராளப்படுத்தவும் செல்வாக்குப் படுத்தவும் அவசியம் ஏற்பட்டதோடு அது மக்களைக் கவர்ந்தும் விட்டது.

லஞ்ச விஷயத்தைப்பற்றி சுவாமிகள் மாத்திரமல்ல நாம் மாத்திரமல்ல, அனேக பெரியார்கள், அதிகாரிகள், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்கள் என்பவர்களெல்லாம் வண்டி வண்டி யாய்ச் சொல்லி இருக்கிறார்கள்.

மற்றும் ஹைகோர்ட்டு முதல் அரசாங்கத் தலைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/292&oldid=1584547" இலிருந்து மீள்விக்கப்பட்டது