உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் 17

ஸ்தாபனங்கள் முதல் ரயில்வே, காபீஸ்டர் இலாகா பஞ்சாயத்துக் கோர்ட், கிராமக் கோர்ட்டு உள்பட அவற்றிற்குள் நுழைகின்றவர்கள் ஒவ்வொருவரும் 100க்கு 90-க்கு மேம்பட்ட வர்கள் லஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்கும் வக்கீல் களையே தேடிப் பிடிக்கிறார்கள் என்பதும் அதற்குண்டான சகல வழிகளையும் வக்கீல்களும் அவர்களது சிப்பந்திகளும் கற்றுக்கொடுத்து அவர்களை நடத்துகிறார்கள் என்பதும் ஒரு சிறிதாவது மறுக்கக்கூடியதா என்று கேட்கின்றோம்.

6.

""

‘உத்தியோகம் செய்ய எதையும் செய்கிறார்கள் உத்தியோகம் பெற எதையும் செய்கிறார்கள் என்பதை உண்மை அல்லவென்று சொல்லமுடியுமா என்று கேட்கின் றோம்.

இந்த விஷயம் வெளிப்படையான இரகசியமாகும்.

கொஞ்ச காலத்துக்கு முன் திருச்சியில் ஒரு சின்ன அதிகாரி ஒரு பெரிய அதிகாரி ஒருவருக்கு தன் மனைவியை அனுப்பியதில் அப்பெரிய அதிகாரி அப் பெண்ணின் மார்பின் முனையைக் கடித்துவிட்டசேதி யாரும் அறியாததா?

மற்றும் கும்பகோணத்தில் ஒரு உயர்தர அதிகாரிக்கு ஒரு கீழ்த்தர அதிகாரி தன் சகோதரியையனுப்பி அந்தம்மாள் அவரோடு கூடவே இருந்து கொண்டு வரமாட்டேன் என்று சான்னதான சேதியும் யாரும் அறியாததா, மற்றும் சில ஜில்லா பெரிய அதிகாரிகள் செல்லுமிடங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சின்ன அதிகாரியை தன்னுடைய சாமான்கள் போலவே கூட அழைத்துக்கொண்டு போவது என்பதும் அதனால் அந்த சின்ன அதிகாரி தனது யோக்கியதைக்கு மீறின பதவிகள் பெறுவதும் கோவை ஜில்லாவில் பலதடவை நடந்த சம்பவங்களாகும்.

மற்றும் வேறு எத்தனையோ விதங்களில் இம்மாதிரியான பிரஸ்தாபங்கள் சர்வ சாதாரணமாகப் பலவிடங்களிலும் வழங்கி வருவதானது யாரும் அறியாதது என்று சொல்லிவிட முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/293&oldid=1584548" இலிருந்து மீள்விக்கப்பட்டது