உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

7. “பணம் சேர்க்கவே கல்வி கற்கிறார்கள்

""

269

பணம் சேர்ப்பதற்கே கல்வி கற்கின்றார்கள் என்பது. இதைக்கூட தப்பு என்று சொல்ல வந்ததானது வேண்டுமென்றே செய்யப்படும் போக்கிரித்தனமான புகார் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாகும்.

இன்றைய கல்வியானது, அறிவுக்குப் பயன்படாத தென்றும் வயிற்றுப் பிழைப்பிற்கு அதுவும் அடிமைப்பிழைப்புப் பிழைத்து வயிறு பிழைப்பதற்கு என்றும் சொல்லாதவர்கள் யாருமே இல்லை. அப்படிப்பட்டவர்களும், அவர்களது பிள்ளைக்குட்டிகளும் மறுபடியும் அக்கல்வியையே கற்கின் றார்கள் என்றால் வேறு எதற்குஆக அவர்கள் கற்கிறார்கள் என்பதை அப்பத்திரிகையாவது கூறி இருக்க வேண்டாமா?

L

இன்று கல்வி கற்றவர்கள் என்கின்ற கூட்டத்தில் சேர்ந்த எவராவது அக்கல்வியை பணம் சம்பாதிப்பதை விட வேறு காரியத்துக்கு உபயோகப்படுத்துகிறார்களா? அல்லது கல்வி கற்ற B.A., M.A., டாக்டர்கள் என்பவர்களுக்காவது அறிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? எத்தனை டாக்டர்கள் தூரமான தன் பெண்ணை தெருவில் தள்ளி கதவைச் சாத்துகிறதைப் பார்க்கிறோம்.

எத்தனை பூகோள சாஸ்திரிகள் கிரகணத்துக்கு சமுத்திரக்கரையில் மூக்கைப் பிடித்து உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம்.

எத்தனை பிரபல நியாயவாதிகள், தர்க்கவாதிகள் தாங்கள் மோட்சம்போக கல்லைக் கும்பிடுவதைப் பார்க் கின்றோம். இவர்கள் எல்லாம் புத்திக்குஆக படித்தவர்களா பணம் சம்பாதிக்கப் படித்தவர்களா என்று கேட்கின்றோம்.

உரலை நினைத்து அவலை இடிப்பதுபோல் பார்ப்பனப் பத்திரிகைகள் வேறு ஏதோ காரணம் வைத்துக்கொண்டு இந்தப் போக்கிரித்தனமான வேலையில் பிரவேசித்து இருக்கின்றன.

அவர்களது சூட்சித் திரமும், விஷமத் திரமும் இப்புத்தகத்தைப் படிக்கக்கூடாது என்று செய்வதில் வெற்றி அளித்துவிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/294&oldid=1584549" இலிருந்து மீள்விக்கப்பட்டது