உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

இரண்டாம் பதிப்பின் முகவுரை

முதற்பதிப்பில் இல்லாத ஐந்து நீண்ட கட்டுரைகள் இப்பதிப்பின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை: ‘கடவுள் நிலை', 'கல்வியுங் கைத்தொழிலும்’, ‘பகுத்துணர்வும் மாதரும்’, 'தனித் தமிழ் மாட்சி’, 'தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும்' என்பனவாகும். இதனால் இப்பதிப்பில் 80 பக்கங்கள் மிகுதியாகச் சேர்ந்துள்ளன.

ப்

முதற்பதிப்பிற் சிற்சில கட்டுரைகளிற் கலந்திருந்த சிற்சில வடசொற்களும் இப் பதிப்பின்கண் அறவே களைந்தெடுக்கப் பட்டன. ன. அதனால் இந்நூற் கட்டுரைகளின் உரைநடை இன்னும் மிகுதியான செந்தமிழ்ச் சுவை வாய்ந்து நடத்தல்

காணலாம்.

1931

இங்ஙனம்

மறைமலைகடிகள்

மூன்றாம் பதிப்பு

இம்மூன்றாம் பதிப்பிற் சிற்சில திருத்தங்கள்

செய்யப்பட்டுள்ளன.

பொதுநிலைக் கழகம்

பல்லாவரம்

1935

இங்ஙனம்

மறைமலைகடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/30&oldid=1584230" இலிருந்து மீள்விக்கப்பட்டது