உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

அறிவுரைக் கொத்தின் மீது ஆத்திரம் சாமி வேதாசலம் எழுதியதில் தவறு எது?

தமிழ்நாடு பத்திரிகையில் கா. கணேஷ் எழுதுகிறதாவது

L

.

சென்னைப் பல்கலைக் கழகத்தமிழ்ப் போர்டார் இவ் வாண்டு இண்டர்மீடியட் வகுப்புக்குப் பாட நூலாக வைத்துள்ள தோழர் சாமி வேதாசலத்தின் “அறிவுரைக் காத்து” என்ற நூலைப்பற்றி ஒருவாரமாகப் பல புகார்களை ஒருவர் மூன்று பேப்பர்களில் வரைந்துள்ளார். “உள்ளதைக் கூறினால் உடம்பெரிச்சல்” என்பது ஒரு பழமொழி. பார்ப்பனர் கொடுமைகளை யாராவது கூறினால் “ஜாதிப் பிரிவினை உண்டாக்குகிறான் என்று”பார்ப்பனர் ஓலமிடுவது வழக்கம், அவர்கள் வாய்பேசாமல் தங்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள பள்ளிக்கூடங்களில் பார்ப்பனரையே அமர்த்துவது; ஆபீஸ்களில் பார்ப்பன குமாஸ்தாக்களையே வேலையில் வைப்பது; பள்ளிக்கூட புஸ்தகங்களும் பார்ப்பனர் எழுதியவை; வெளியிட்டவை பிராமண கம்பெனிகள்; இங்ஙனம் மௌனமாக ஒரே கட்டுப்பாடாக பிராமணர் தம் ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருவதை ஆண்மையும் தூய இரத்த ஒட்டமும் உள்ள எவரும் பொய் என்று மறுக்கமுடியாது. இதன் உண்மையை ஆராய அதிக தூரம் போகவேண்டியதில்லை. திருவல்லிக்கேணியில் உள்ள ஹிந்து ஹைஸ்கூலில் உள்ள உபாத்தியாயர்களையும் மைலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூலில் உள்ள உபாத்தியாயர்களையும் ஒரு முறை பார்வையிட்டால்போதும். அதை ஆழ்ந்து கவனித்தாலே சமூக துவேஷம் யாரிடத்தில் இருக்கிறதென்பதைப் பிராமண ரல்லாத மக்கள் தாமே தெரிந்துகொள்ளலாம். ஹரிஜன சேவா சங்கம் ஹரிஜனங் களுக்காக ஏற்பட்டது. இதில் உத்தியோகம் பார்ப்பவர் அனைவரும் வைதீக (தீண்டாமை ஒழிப்பை முற்றிலும் எதிர்க்கும்) பார்ப்பனர். 'சன்னாசி’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/307&oldid=1584563" இலிருந்து மீள்விக்கப்பட்டது