உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் 17

6

தமிழருக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தம் ஏது? ஹிந்து மதம் யாரால் எப்பொழுது எதற்காக ஏற்படுத்தப்பட்டது? ராமாயணமும், பாரதமும் பொய்க்கதைகள்- உயர்வு நவிற்சியணியாகக் கூறப்பட்ட கதைகள் என்பதை இவர் அறியாவிட்டால், மும்மொழிப் புலவராகிய சுவாமிகள் மீது குறைகூறுவானேன்? ஹனுமான் விஸ்வரூபம் எடுத்ததும், கண்ணன் விஸ்வரூபம் எடுத்ததும், ஹனுமான் இலங்கைக்கு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்த வரலாறும், துரோபதையை நிர்வாணமாக்கிய கதைகளை கூறும் கூறும் இராமாயணமும், பாரதமும், அயோக்கியத்தனமான கட்டுக்கதைகள் என்பதில் தடையென்ன? இதைச் சுய அறிவும் பார்ப்பனரால் கலக்கப்படாத தெளிந்த அறிவும் உள்ள எந்தத் தமிழன்தான் “உண்மைக் கதைகள்” எனக்கூற முடியும்? தமிழ் மன்னனான இராவணனை-சுத்த வீரனான இராவணனை கொன்று ஆரியர் தமிழ்நாட்டில் ஆதிக்கத்தை உண்டாக்கிக் கொண்ட வரலாறு தானே இது இதைப் பிரமாதப்படுத்தி, பாவ புண்ணியங் களையும், தங்கள் பிராமணப் பெருமையையும் உயர்த்திக்கூறும் நூலாகச் செய்துவிட்டது ஆரிய பிராமணர் சூழ்ச்சியல்லவா? இதனை ஆராய்ந்த சுவாமிகள் “அவை நம்பத்தகாத கதைகள்” என்று எழுதினால், எந்த ஹிந்துவுக்கும், தமிழனுக்கும் மனம் புண்ணாக இடமில்லையே. யாவும் பழுதற வுணர்ந்த சுவாமிகள், ஒரு வார்த்தை எழுதினாலும், அதனை எவரும் அசைக்கமுடியாதென்பதை தமிழர் மறுக்க முடியாது. சுவாமிகளின் படிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கும் இல்லாதவர்கள் கண்டபடி பிதற்றுதல் அறிவீனமும் ஜாதித் துவேஷத்தை வளர்ப்பதுமே யாகும்.

இதில் என்ன தவறு?

“பார்ப்பனர் செல்வர் முதலியோர்க்கும், ஏழைகட்கும் உள்ள சம்பந்தத்தைத் தவறான முறையில் எழுதியுள்ளார்” என்பதும் அப்புத்தகத்தை எதிர்ப்பவரின் மற்றோர் கூற்றாகும். சுவாமிகள் இவ்விடத்தில் ஒரு தவறும் செய்யவில்லை என்பதை அந்நூலை வாசிப்போரும் சுய அறிவுள்ளவரும் மறக்க மாட்டார்கள் இக்காலத்தில் பார்ப்பனர். ஏழைகளாகிய ஆதி இந்துக்களுக்கு இழைத்து வரும் தீங்கை அறியாதாரில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/309&oldid=1584565" இலிருந்து மீள்விக்கப்பட்டது