உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

285

ய்

செல்வர்களால் ஏழைகட்கு என்ன நன்மை உண்டாய் விட்டதென்பதை மறுப்பு எழுதின நண்பர் கூற முன்வருவாரா? சுயநலக்காரராகிய பிராமணரும் பெரும்பாலான பணக் காரரும் பெரும்பான்மையோராகிய இந்நாட்டு ஏழைகட்குச் செய்த கடுகளவு நன்மையாவது யாது? பணக்காரப் பிராமணன் மற்றொரு பிராமணனைத்தான் தன் வீட்டில் பையனுக்குப் பாடங்கற்பிக்க அமர்த்துகிறான். பிராமணரல்லாத பணக்கார னும் தன் சமூகத்தில் எவ்வளவோ மேதாவிகள் இருந்தும், கண்டவுடன் அடிபணியும் பிராமண ஆசிரியரைத்தான் உபாத்தியாயராகவும், குமாஸ்தாக்களாகவும் அமர்த்துகிறான். ஏழைகட்கு இடம் இந்தப் பிராமணர் உலகிலும், பணச் செருக்குக்கொண்ட செல்வர் சிலர் வாழும் உலகிலும் இல்லை என்பதுதான் கூறவேண் வேண்டியிருக்கிறது, தலைநகரான

சன்னையில் இருக்க இட மில்லாமல் தவிக்கும் 25-ஆயிரம் ஏழை மக்களைக்கேட்டால் அல்லவா உண்மை விளங்கும்? பிராமணரல்லாதாரை ஏமாற்றி வழக்கு மூலமும், திதி, கருமாதி, கல்யாண மூலமும் கொள்ளையிடும் கூட்டத்தினருக்குச் சுவாமிகள் ஏழை L மக்களைப்பற்றி வருந்திக் கூறுதல், பொறாமையையும், வயிற்றெரிச்சலையுந்தான் உண்டாக்கும் இவ்விஷயங்களைப் பிற்கால இந்தியராக வரும் சர்வ கலா சாலை மாணவர்கள் படித்தல் முற்றிலும் பொருத்த முடைய தல்லவா?

மானக்கேடான காரியம்

“உத்தியோகஸ்தர்களும், வேலை வேட்டையாடுபவரும் தன் காரியத்தைச் சாதிக்க மானக்கேடான காரியங்களைச் செய்வது வெறுக்கத்தக்கது” என்று சுவாமிகள் “அறிவுரைக் கொத்” தில் கூறியிருப்பதாக ஒரு கண்டனம். இதில் ஏதாவது தவறு உண்டா? அதிகாரிகள் கொள்ளையடிப்பதில்லையா? தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பலர் பலவிதமான- உண்மையில் மானக்கேடான-காரியங்கள் செய்வதில்லையா?

து யாருக்குத்தான் தெரியாது? இதுதான் உலகம் அறிந்த விஷயமாயிற்றே பல விவரங்களை எடுத்துக் கூறிப் பச்சையாக எழுதுவது எனக்குப் பிடிக்கவில்லையாதலால் இத்துடன் விடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/310&oldid=1584566" இலிருந்து மீள்விக்கப்பட்டது