உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

அக்காலப் படிப்பு

மறைமலையம் 17

"சுவாமிகள், ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்னரே ஒழுங்கான கல்வி முறை ஏற்பட்டது; அதற்குமுன் நம் நாட்டுக் கல்வி அந்தகாரத்தில் திண்ணைப் பள்ளிக்கூட அளவிலேதான் ருந்தது என்று தவறாகக் கூறுகிறார்” என்பதும் மற்றோர் கூற்று என்பதைப் பின்கூறுங் காரணத்தால் உணர்க. மறுப்பு எழுதியவர்கள் தக்ஷசீலா நாலந்தா முதலிய சர்வகலாச் சாலைகள் இந்தியாவில் சிறந்திருக்க நம்நாட்டில் கல்வி இ ல்லை என்பது தகுமா? என்று கேட்கிறார்கள். தக்ஷசீலாவும், நாலந்தாவும் வடநாட்டில் சுயநலக் கூட்டத்தாருக்காக சமஸ்கிருத அபிவிருத்திக்கு ஏற்பட்டவையே தவிர, தமிழ் நாட்டில் தமிழ் அபிவிருத்திக்கு ஏற்பட்டவையா என்று அவர்களையே கேட்கிறேன். வட இந்தியாவில் இமயமலை சாரலில் ஒருசில மாணவர் சமஸ்கிருத பாஷை பயில்வதற்கு ஏதோ ஒரு ஜன்மத்திலிருந்த ஒருசில சர்வகலாச்சாலைகளால் முழு இந்தியாவே கல்வி மணத்தோடு திகழ்ந்தது என்று கூறுவது அறிவீனம் அல்லவா? ஒரு தமிழன் இப்படி எழுதுவானா? தமிழ் நாட்டில் திண்ணைப் பள்ளிகளைத் தவிர எவ்விதக் கலாச்சாலையாவது (சங்க காலத்திலும் சரி) இருந்ததாக எந்தத் தமிழ்ப் புலவரும் கூறமுடியாது. இதனைக் கூட ஆழ்ந்து யோசியாமல் சுவாமிகளைக் குறைகூறுவது பெருந் தவறாகும். ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்னரே தமிழும் (வசன யில்) வளர்ச்சி யடைந்ததென்பதில் அய்யமில்லை. ஆங்கில ஆட்சி இல்லையாயின் பிராமணர் ஆக்கம் விந்திய மலைக்கப்பால் அன்றோ இருந்திருக்கும்?

நடை

இதில் ஏன் ரோஷம்?

'பார்ப்பனர் அல்லாத நம்மனோர்' என்று அடிகள் வரைந்துள்ளார் என்பது ஒரு மறுப்பு. இதில் தவறென்ன? ஆங்கில நூல்களில் “நாம்” என்று எழுதியுள்ள வார்த்தைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான நூல்களை இந்தியர் ஏன் படிக்கவேண்டும் வெள்ளையன் சொன்னால் வெல்லம்; கருப்பன் சொன்னால் கசப்பா? “உங்கள் புத்தகங்களில் “நாம்” என்று உங்களைக் கூறிக்கொள்ளுதலை நாங்கள் வெறுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/311&oldid=1584567" இலிருந்து மீள்விக்கப்பட்டது