உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

287

கிறோம். அவை நாங்கள் படிக்கத்தக்க நூல்கள் அல்ல” என்று ப்பூதர்கள் என்றாவது எதிர்த்துக் கூறியுள்ளார்களா? சுவாமிகள் சொன்னால் மாத்திரம் ரோஷம் விடுவானேன்?

வந்து

இறுதியாக, மறுப்பெழுதியவர்கள் “யூனிவர்சிடியாரும்,

தமிழ் போர்டாரும் இவ்விஷயங்களை அறிந்தே

வைத்தார்களா?

சுவாமிகளின் இப்போதனைகள்

மிக

அவசியமாகப் பிள்ளைகள் உணரவேண்டுமென நினைத்தே வைத்தார்களா?" என்று கேட்டுள்ளார்கள். சுவாமிகளின் நூலை பதின்மூன்று போர்டுமெம்பர்கள் சேர்ந்த கூட்டத்தில் முடிவு செய்தே வைக்கப்பட்டது. அது எந்தத் தனி நபருக்கும் பொறுப்புமன்று. எல்லோரும் 'இந்நூலைப் பிள்ளைகள் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டுவதே' என்று முடிவு கட்டித்தான் வைத்தார்கள். மகாமஹோபாத்தியாய அய்யரும் உடனிருந்து செய்தவேலைதான். இது அந்தப் போர்ட்டில் இருந்த நான்கு பிராம்மணப் பண்டிதர்கள் இந்நூலைப் படிக்காமலா வைக்க ஒப்புக்கொண்டார்கள்? எங்களுக்குத் தெரியாது என்று கூற என்று கூற அவர்கள் முன் அவர்கள் முன் வருவார்களா? இரண்டாம் வகுப்பு மாணவனுக்கும் பயன்படாத கேவலம் தமிழும் இல்லாத, சம்ஸ்கிருதமும் இல்லாத பொதுப்பாஷை ஒன்றில் ஒரு பிராமணர் எழுதிய ஒரு புத்தகத்தை இவ்வருடம் இண்டர்மீடியட் பரீட்சைக்கு வைத்திருக்கிறார்களே! அதைப்பற்றி நண்பர்கள் ஏன் மறுப்பு எழுதவில்லை? அதை பிராமணர் எழுதியதால், அது வெல்லம் போலச் சுயநலக் கூட்டத்தாருக்கு இனிப்பைத் தருகிறது போலும்?

செய்தது சரிதான்

“பொதுமக்கள் யூனிவர்சிட்டியாரை இது விஷயமாகக் கண்டுபேசி யூனிவர்சிட்டியின் மானத்தையும், வைதிகர் மானத்தையும் காப்பாற்றவேண்டும்” என்று மறுப்பாளர் கூறியுள்ளார். யூனிவர்சிட்டியார் செய்த வேலை சரியென்று எல்லாத் தமிழரும் ஆதரிப்பாரேயன்றி சுயநலக் கூட்டத்தாருக்கு ஆதரவுதர முன்வரார் என்பதை உறுதியாக நம்பும்படி கேட்டுக்கொள்கிறேன். சுவாமிகள் “அறிவுரைக்கொத்தை”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/312&oldid=1584568" இலிருந்து மீள்விக்கப்பட்டது