உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் 17

அன்பர்களே நாம் தமிழை உயிரோடு வைக்கப்பாடுபடவேண்டும். ஐயகோ! தமிழைக் கொல்ல மடிகட்டி நிற்கலாமா? நூற்றுக்கு எண்பது வ சொல்லும் இருபது தமிழ்ச் சொல்லுமாக எழுதினால் பேசினால் தமிழ் எப்படி பிழைத்தல் கூடும்? வடமொழி பயில வேண்டாம் என்று யான் கூறவில்லை. மகிழ்வுடன் பயிலுங்கள். நானும் பயில்கின்றேன். ஆனால், அன்பர்களே தமிழ்த் தாயைக் கொல்லாதீர்கள். தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்பு போல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். அடியேன் உங்களைப் பெரிதுங் கெஞ்சுகின்றேன். ஆண்டவர் களே! தமிழைக் கெடுக்காதீர்கள்! தனித் தமிழுக்குப் பாடுபடுங்கள் (பெருங் கைத்தட்டல்) பண்ை புலவராயினும், இக்காலத்தவராயினும், மற்ற எவராயினும் தமிழுக்கு கேடுவிளைத்தோரை விளைப்போரை ஒரு

மாட்டேன்.

ப்

பொருளாகக் கருத

மறைமலையடிகள்

- தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு

பக்- 475

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/315&oldid=1584573" இலிருந்து மீள்விக்கப்பட்டது