உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291

ஆங்கிலத்தால் நேர்ந்த அழிவு

ட்சிமொழியானால்-அறிவுக்கான

-

ஒரு தாய்மொழி வழங்கும் நாட்டில் வேற்றுமொழி ஒன்று மொழி என்று கற்பிக்கப்பட்டால் நாட்டுமக்களில் 100க்கு 90 பேராவது கல்வியற்றவர்களாய் அறிவிற் குறைந்தவர்களாய்த்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட நாட்டில் அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் பொருள்வளம் பெருகி மக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ முடியாது. இதற்கு நம் நாடே போதிய சான்று.

தம் நாட்டில், தம்மொழியே ஆட்சிமொழி - அறிவு மொழியானால் அந்நாடு பொருள்வளம் பெற்றுச் சிறந்தோங்கும். இதற்குச் சான்று ஐரோப்பிய - அமெரிக்க உருசிய நாடுகளாம். அறிவைப் பிறமொழியில் பெறுதற்குப் பல்லாண்டுகளும், பொருட் செலவும், முயற்சியும் 50 விழுக்காடு வீணாய் விடுகிறது; அத்துடன் ன் தன் தாய்மொழியில் நம்பிக்கையில்லார்க்கு அறிவும் ஆண்மையும் நலியத்தானே

செய்யும்!

-

ஆங்கிலம் ஆ ட்சி சிமொழியாக இருப்பதால் தாய் மொழியில் மக்களுக்கு ஆர்வமிருந்தாலும் அதனைப் பயில்வதால் வாழ்விற்குரிய வளங்கள் கிட்டா என அஞ்சி அவர்கள் தம் தாய்மொழிப் படிப்பைக் கைவிடுகின்றனர்.

அறிவியல் முதலிய பலதுறை நூல்கள் யாவும் தமிழிலிருந்தால் நகரத்தும், நாட்டும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கல்லூரிகளின் உதவியின்றிப் பொருட் செலவின்றித் தாமே ம அவற்றைக் கற்றுப் பயனடை வர். அத்துடன் அந்நூல்களாற்பெற்ற அறிவின் நலத்தால் - அவை கொண்டு தாம் செய்யும் தொழில்களால் மேலும் தாம் பெறும் அறிவாற்றல்களை நாட்டுக்கு வழங்குவரன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/316&oldid=1584574" இலிருந்து மீள்விக்கப்பட்டது