உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மறைமலையம் 17

இவ்வாற்றால் கோடிக்கணக்கான

மென்றிருந்தால்,

மக்களின்

தலை

அறிவாற்றல்கள் ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகுமன்றோ? அதனால் நாட்டின் பொருள் வளமும், கலை வளமும் சிறக்குமன்றோ? அந்நிலையில் நாட்டில் வறுமை காட்டுமா? தம் தாய் மொழியில் பல்துறை அறிவுக் கலைகள் உள்ளபடியினாற்றானே ஆங்கிலர், அமெரிக்கர், உருசியர் முதலியோர் உலகில் உயர்ந்த நலங்கள் பெற்று வாழ்கின்றனர். அவர்கள் யாவரும் தம் தாய்மொழியிலன்றித் தமிழ் முதலிய வேறு மொழிகளில்தான் அவற்றைக் கற்றல் வேண்டு அந்நாடுகள் இத்துணைச் சிறந்த நிலையிலிருக்க இயலுமா? எண்ணிப் பாருங்கள்! உண்மையில் தாய்மொழிகயை வளர்க்க வேண்டுமென்ற நாட்டம் நம் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் ஒரு பத்தாண்டு திட்டத்தில் அறிவியற் கலைகள் அனைத்தையும் நம் தாய்மொழியில் மொழிமாற்றி இருக்கலாமே! இன்றுகூட அவை அம்முயற்சியில் மனமார விரைந்து தலைப்படவில்லையே! அப்படிச் செய்தால் ஆங்கிலம் போய்விடுமே என்று அஞ்சுகின்றனர் போலும்! இல்லை; மொழி பெயர்ப்புக்காவது ஆங்கிலப் பயிற்சி வேண்டாமா? என்பர். அதற்கு 40 கோடி பேர் ஆங்கிலம் கற்க வேண்டாம். கூரிய அறிவுடைய ஆயிரவர் போதுமே! நாற்பது கோடி பேரை ஆங்கிலம் படி என்று தண்டிக்க வேண்டுமா? உலகில் ஒரு நாட்டுக்கே தலைமை தந்துவிட்டால் நாளடைவில் ஏனைய நாடுகள் தன்னம்பிக்கையற்று - மடிமை கொண்டு தாழ்ந்தொழியும், அதுபோலவே ஆங்கிலத்துக்குத் தலைமை தந்தால் பிறமொழிகள் தாழ்ந்தொழியும். மொழி மட்டுமல்ல, மொழிக்குரிய மக்களும் அந்நிலையடைவர்.

தாய்மொழியாளர்கள்

-

ஒருநாட்டின் வளர்ச்சி அதன் மொழியின் வளர்ச்சி கொண்டு அறியப்படும். இதற்குச் சான்று ஆங்கில நாடும் நம் நாடுமாகும். மற்றுமொரு பெருங்கேடு! ஆங்கிலம் கல்லா கோடிக்கணக்கானவர் தம் உரிமையிழந்து உணர்விழந்து அடிமைகளாய் ஆங்கிலம் கற்றாரைக் கண்டு அஞ்சித் தம்மைத் தாழ்ந்தவராய் நினைத்துக் காள்கின்றனர். இதனால் தனால் அரசாங்க ஆணையர்கள் எழுத்தாளர்கள் - ஊழியர்கள் புரியும் அட்டூழியங்கட்கும், கொடுமைகட்கும் எல்லையேது?

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/317&oldid=1584575" இலிருந்து மீள்விக்கப்பட்டது