உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மறைமலையம் 17

நீங்கலாக) தமிழர்களே எனினும், ஆங்கிலத்திற்குப் பரிந்து தாய்மொழியை மறைமுகமாக எதிர்க்கின்றனர். இவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக உடையவர்களுக்கும் மேலாக ஆங்கில ஏற்றத்திற்காகப் பேசுகின்றனர். இவர்கள் தாமா கோடிக்கணக்கான ஆங்கிலம் அறியாப் பொதுமக்கட்கு நன்மை செய்யக்கூடியவர்கள்?

இராசாசி போன்ற நல்ல சான்றோர்கள் கூட இன்று ஆங்கிலத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்டுத் தாய் மொழியின் நன்மைக்காக ஒன்றும் பேசாமல்

கின்றார்களே!

இருக்

இப்படி ஆங்கிலப் பித்தர்களால் தமிழ் மொழிக்கும், நாட்டின் நல் வளர்ச்சிக்கும் பல்கோடிப் பொதுமக்களுக்கும் நேர்ந்துள்ள கொடும் துன்பங்களை எடுத்துரைக்க யாருளர்? அங்ஙனம் எடுத்துரைக்கும் கருத்துக்கட்குத் தமிழ்த்தாளர்களான தினமணி, சுதேசமித்திரன், தமிழ்நாடு, கல்கி முதலிய இதழ்கள் தம் தாள்களில் இடந்தருமா?

ஆங்கிலத்துக்குச் சார்பான கருத்துக்களை எல்லாம் காட்டை எழுத்துக்களில் கோடிட்டுக் கூறித் தமிழ் மொழிக்குச் சார்பான கருத்துக்களை எல்லாம் 'இருட்டடிப்பு செய்வதற்கன்றோ இத்தாள்கள் உள்ளன!'

-

இன்னும் திராவிடநாடு திராவிட இனம் என்று பேசுவோர் தாம், நடத்தும் தாள்களிலும், பேச்சுக்களிலும், ஆங்கிலப் பயன்களையும், சிறப்புக்களையுமே எடுத்துப் பேசுவதில் மேற்கூறிய தாள்களின் ஆசிரியர்களையும், தாள்களையும் மிஞ்சி விடுகின்றனரே! அக் கூட்டத்தவர்கள் தங்கள் தலைவர்கட்குப் பெருமை தேடுவதில் அத்தலைவர் களின் எம்.ஏ. பட்டங்களைத் தாமே பெரிதாக விளம்பரம் செய்கின்றனர்? தம் தலைவர்களைவிட அவர்தம் எம்.ஏ. பட்டங்களில் அக்கட்சியாளர்கட்கு இருக்கும் ஈடுபாட்டை என்னென்று வியப்பது? அப்பட்டங்கள் மீது அவர்கட்குள்ள ஆராக்காதல் பெரிது! பெரிது! அவ்வியக்கத் தலைவர்கள் தம் கட்சியாளர்கட்கு ஆங்கில மோகத்தை அப்படி ஊட்டினார்கள்!

மற்றுமொரு வியப்புக்குரிய செய்தியாவது; தமிழாசிரியர் கட்குத் தமிழைவிட ஆங்கிலத்தின் மேல்தான் அளவு கடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/319&oldid=1584577" இலிருந்து மீள்விக்கப்பட்டது