உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

295

மயக்கமும், அவாவும், மறைந்த ரசிகமணி (டி.கே.சி. நம் தலைவர்கள் பெயர்கள் கூட இப்படி ஆங்கில எழுத்தில் ஆளப்படுகின்றன!) என்னை நோக்கி, “மறை! உங்கட்குத் தெரியுமா? தமிழாசிரியர்கட்கும் தமிழில் பற்றும் நம்பிக்கையும் இல்லை என்பது? அடடா! இப்பாழும் தமிழை ஏன் படித்து மதிப்பிழந்தோம்! என்று வருந்துவது! வெளியில் மேடையில் தமிழ் தமிழ் என்று முழக்குவர். உள்ளுக்குள் ஆங்கிலமே அவர்கட்குத் தெய்வம்” என்பர்.

அவர் ஏதோ! மிகைப்படுத்திச் சொல்கின்றார் என்று யான் கருதினேன். பிறகு என் காட்சியில் அவர் கூற்றில் 50 பங்கேனும் உண்மையுண்டென்று அறிந்து கொண்டேன். தமிழாசிரியர்கள் பலர், "மாணவர்கள் முன் சிறுமைப் பட்டாலும் குற்றமில்லை, தமக்கு ஆங்கிலம் தெரியும் என்று அவர் அறிந்தால் போதும்” என்றெண்ணி ஏராளமாய் ஆங்கிலச் சொற்கள் - தொடர்களைப் பேசித் தம் தாழ்மை மனப்பான்மையைக் காட்டிக்கொண்டு மாணவர்களால் இகழப்படுகின்றனர்.

D

- பேரா. மறை திருநாவுக்கரசு தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு

(பக் 706 -709)

இந்நூல் 1959இல் வெளிவந்துள்ளது. அன்று நிலவிய அதே நிலைதான் இன்றும் நிலவுகிறது. இதனைப் படிப்பவர்கள் உணர்க. மாற்றுக்கான வழியைச்சிந்திக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/320&oldid=1584578" இலிருந்து மீள்விக்கப்பட்டது