உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

9

பொருள்களையும் நாம் கேளாமலே அமைத்துக் கொடுத்து, மற்றைத் தொழிலாளரும் புலவரும் அழிந்தொழிவது போல் அழிந்தொழியாமல் எக்காலத்தும் எவ்விடத்தும் நம்மோடு உடனிருக்கும் எல்லாம் வல்ல பெருமானைக் காண்பதற்குங் கண்டு வணங்குவதற்கும் மக்களாகிய நாம் இன்னும் எவ்வளவு மிகுந்த பேராவல் உடையவர்களாய் இருக்க வேண்டும்!

மக்களிற் சிறந்தாராயுள்ள சிலரைக் கண்டு வணங்குதலா லேயே, நம்மனோர்க்கு அத்தனையன்பும் இன்பமும் உண்டாகு மானால், எல்லாச் சிறப்புக்குந் தலைவனாய் நிற்கும் இறைவனைக் கண்டு வணங்குதலால் நமக்கு இன்னும் எவ்வளவு மிகுதியான அன்பும் இன்பமும் உண்டாதல் வேண்டும்! ஆதலால் மக்களுக்குக் க் கடவுளுணர்ச்சியுங் கடவுளை வணங்குதலும் வேண்டாவெனக் கரைவாரது வெற்றுரை மக்களுக்குச் சிறிதும் பயன்படாதென்று உணர்ந்துகொள்க.

னி, 'விருப்பு வெறுப்பில்லாக் கடவுள், தன்னை மக்கள் வணங்கல் வேண்டுமெனவுந் தனக்குத் திருக்கோயில்களுந் திருவிழாக்களும் வேண்டுமெனவும் விரும்புவரோ' என வினவிச் சிலர் நம்மனோரை ஏளனஞ் செய்கின்றார்.

கடவுள் தம்மை மக்கள் வணங்கல் வேண்டுமெனத் தமது திருவுள்ளத்திற் கருதுவது, அதனால் அவர் தமக்கு ஒரு பெருமை தேடிக் கொள்ளுதற்கு அன்று. ஒருவன் பிறனொருவனை வணங்குவது அச்சத்தினாலும் நிகழும்; அன்பினாலும் நிகழும் செல்வத்தினாலேனுங் கல்வியினாலேனுந் தலைமையினா லேனும் வலிமையினாலேனுஞ் சிறந்தானாயிருக்கும் ஒருவனைச் செல்வமுங் கல்வியுந் தலைமையும் வலிமையும் இல்லாத பிறர் பெரும்பாலும் அச்சத்தால் வணங்காநிற்பர். மேற்சொன்ன வளங்களுடையோன் தன்னையே பெரியனாக மதித்துத் தன்னை வணங்குவோரை மதியாது ஒழுகும் வரையில், அவனை வணங்குவோர் அவன்பால் என்றும் அச்சமே கொண்டு நிற்பர். அங்ஙனஞ் செல்வம் முதலிய வளங்களால் உயர்ந்தோன் தன்னை மேலாகக் கருதாது, தன்னை வணங்குவோரெல்லா ரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையனாய் ஒழுகுவனாயின், அவனை வணங்குவார் தமக்குள்ள அச்சந்தீர்ந்து அவன்பாற்

பேரன்புடையராய் உளங் குழைந்து உருகியொழுகு

தலையுங் காண்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/34&oldid=1584234" இலிருந்து மீள்விக்கப்பட்டது