உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

66

3. திருக்கோயில் வழிபாடு

"மூர்த்தி தலந் தீர்த்தம் முறையாற் றொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே மே"

தாயுமான சுவாமி தெய்வத்தன்மை பொருந்திய ஒளவையார், "ஆலயந் தொழுவது சாலவும் நன்று” என்று அருளிச் செய்திருக் கின்றார். 'கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது' என்பதே, அத்திருமொழியின் பொருளாகும். மற்ற இடங்களிலிருந்து செய்யும் வழிபாட்டைக் காட்டிலும் கோயிலுக்குச் சென்று அங்கே கடவுளுக்குச் செய்யும் வழிபாடு ன்றே சிறந்ததாகும் என்பது அதனால் தெளிவாகப் புலப்படுகின்றது.

6

காணமாட்டாத

கடவுளையன்றி வேறெதனையுங் முற்றுணர்வுடையார்க்குக் கோயிலிற் செய்யப்படும் வழிபாட்டிற்கும் வேறிடங்களிற் செய்யப்படும் வழிபாட்டிற்கும் வேறுபாடு சிறிதுந் தோன்றாதாயினும், உலகங்களையும் உலகத்துப் பொருள் களையுமே எந்நேரமும் நினைந்து காண்டிருக்கும் மற்றை எல்லார்க்குந் திருக்கோயில் வழிபாட்டைத் தவிரக் கடவுளை நினைந்து உருகுதற்கு வேறு வழி சிறிதுமே இல்லை.

கோயில் அல்லாத மற்ற இடங்களெல்லாம் உணவு தேடுதற்கு இசைந்த முயற்சிகளுந், தேடிய பொருள்களை வைத்து நுகர்தற்கு இசைந்த முயற்சிகளுமே நடைபெறுந் தன்மை யுடையனவாய் இருக்கின்றன. அந்த முயற்சிகள் நடக்கும் இடங்களிலே செல்பவர்களுக்கு அங்கேயுள்ள பொருள்களைப் பற்றிய நினைவும், அம்முயற்சிகளைப் பற்றிய நினைவுகளுமே அடுத்தடுத்து உள்ளத்தில் தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/45&oldid=1584247" இலிருந்து மீள்விக்கப்பட்டது