உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

21

மாம்பழம் விற்குங் கடைப் பக்கமாய்ச் செல்வார்க்கு மாம்பழத்தைப் பற்றிய நினைவும், சாராயம் இறைச்சி கஞ்சா அபின் முதலான தீய பண்டங்கள் விலையாகும் அங்காடி வழியே செல்வார்க்கு அவற்றைப் பற்றிய நினைவுகளும், புழுகு மருக்கொழுந்து சந்தனக்கட்டை முதலான நறுமணங் கமழும் இனிய பண்டங்களுள்ள இடங்களிற் செல்வார்க்கு அவற்றைப் பற்றிய நினைவுகளும், பயன் மிகுந்த கல்விப் பொருளை ஊட்டும் பள்ளிக்கூட வழிச் செல்வார்க்குக் கல்வியின் அருமையைப் பற்றிய நினைவும், ஒருவர் பிணமாய்க் கிடக்க அவரைச் சூழ்ந்து சுற்றத்தார் ஓவென்றலறும் வீட்டின் ஓரமாய்ச் செல்வார்க்கு நிலை யாமையைப் பற்றிய நினைவும், அழகுமிக்க

இருவர் மணஞ்செய்ய அவரைக் கண்டு எல்லாரும்

மகிழ்ந்திருக்கும் வீட்டின் பக்கத்தே செல்வார்க்கு அம் மகிழ்ச்சியைப் பற்றிய நினைவுந் தோன்றுதலைத் தெளிவாக அறிந்திருக்கின்றனம் அல்லமோ?

இவற்றைப் போலவே கடவுளைத் தொழுதற்கென்று ஆங்காங்கு அமைந்திருக்குங் கோயில்களான

L

தூய

டங்களுக்குச் செல்லும் நல்லோர்க்குக் கடவுளைப் பற்றிய நினைவும் இடைவிடாது தோன்றுவதாகும். உலக வாழ்வெனுந் துன்பத்தில் கிடந்து உழன்று கொண்டு கடவுளை நினைதற்கு இடமின்றி வருந்தும் மக்களுக்கு இடையிடையே நம் ஐயனைப் பற்றிய எண்ணத்தை எழுப்பும் பொருட்டாகவே ஓர் ஊரிற் பல டங்களிலுங் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கோயில்களே இல்லாத நாடு நகரங்களில் இருப்பவர் களுக்குக் கடவுளைப்பற்றிய நி வுளைப்பற்றிய நினைவு சிறிதும் தோன்றா தாகையால் அவர்கள் விலங்குகளினுங் கடைப்பட்ட வராவார்கள்; உயர்ந்த நினைவில்லா அவர்கள் தங்கியிருக்கும் அவ்விடங்கள் விலங்குகள் குடிகொண்ட காடுகளையே ஒப்பனவாகும். இவ்வுண்மையினை உணர்த்து தற்கன்றோ, திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவிலூரும், பருக்கோடிப் பத்திமையாற் பாடா ஊரும் பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/46&oldid=1584248" இலிருந்து மீள்விக்கப்பட்டது