உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் -17

விருப்போடு வெண்சங்க மூதாவூரும்,

விதானமும் வெண்கொடியுமில்லா வூரும், அரும்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே

என்னுந் திருப்பாட்டும் எழுந்தது.

“திருநீறு அணியாத நெற்றியைச் சுடு, சிவாலயம் இல்லாத ஊரைக் கொளுத்து' என்னும் உபநிடதத் திரு திருமொழியும் இவ்வுண்மையினையே அறிவிப்பதாகும்.

இனி, மனஉறுதி உடையவர்கள் எந்த இடத்திலிருந்தும் கடவுளை நினைக்கலாமாகையாற், கடவுளைத் தொழும் பொருட்டுக் கோயிலுக்குத்தான் செல்லல் வேண்டுமென்று வற்புறுத்தியுரைத்தல் என்னையெனின், மேலே சொல்லியபடி கோயிலைத் தவிர மற்ற எல்லா இடங்களும் வேறு வேறு நினைவுகளை உள்ளத்தில் எழுப்பி மனவுறுதியைச் சிதைப்பன வாய் இருத்தலால், நம்மனோரில் எவ்வளவு மனத்திட்பம் வாய்ந்தவர்கள் இருந்தாலும் அவர்கள் மற்ற இடங்களிலிருந்து கடவுளை நினைக்கப் புகுவார்களாயின், அவர்களைச் சுற்றிலும் நடக்கும் உலக முயற்சிகளாலும், அவ்வவ்விடங்களைப் பற்றிய எண்ணங்களாலும் அவர்களுடைய ய நி நினைவு கலைந்து பழுதுபட்டுப் போகும்.

மேலும், அத்தனை மனவுறுதி வாய்ந்தவர்கள், பலருங் கடவுளைத் தொழுதற்கென்ற இடமாக வகுக்கப்பட்டமையாற் பலரின் நினைவுகளால் மிகவும் புனிதமாய் விளங்குந் திருக் கோயிலின் உள்ளே சென்று நம் ஆண்டவனை வணங்குவதற்குப் பின்வாங்குவதுங் கூசுவதும் அருவருப்பதும் ஏன்? மிகப் புனிதமான கோயிலை வெறுப்பது மனவுறுதிக்கு அழகாகுமா? பலருடைய நினைவாற் கடவுளுக்கென்றே சிறப்பாக அமைக்கப் பட்ட கோயிலிற் சென்று வணங்குவதால் மனவுறுதி யுடையார்க்கு அவ்வுறுதி மேலுமேலும் உரம்பெற்று ளங்குவதோடு அவரது நினைவும் அங்குள்ள இறைவன் திருவுருவத்தை நேரே கண்டு மகிழ்ந்து திருவருள் இன்பத்திற் படிந்திருக்குமன்றோ?

ஆகையால், மனவுறுதியுடைவர்களுக்குந் திருக்கோயில் வழிபாடு இன்றியமையாது வேண்டற்பாலதேயாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/47&oldid=1584249" இலிருந்து மீள்விக்கப்பட்டது