உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

23

அளவற்ற மனவுறுதியுங் கரைகடந்த அன்புந் தூய உள்ளமுந் தூய அறிவும் நிறைந்த திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான மேலோரே கோயில்கடோறுஞ் சென்று நம் ஐயனை வணங்கி வந்தனராயின், தாழ்ந்த நிலையி லுள்ள மற்றவர்கள் திருக்கோயில் வழிபாட்டைக் குறைவாகக் கருதுவதும், அத அதனை ஏளனஞ் செய்வதும் எவ்வளவு பொல்லாத குற்றமாய் முடியும்!

அப்படியானாலும் மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறிகளுக்கும் மனத்திற்கும் புலனாகாமல் அறிவு வடிவாய் எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் பிரிவற நிறைந்து நிற்கும் இறைவனை அவ்வறிவு வடிவாகவே நினைந்து வணங்காமற், கல்லினாலுஞ் செம்பினாலும் உருவாக்கப்பட்ட உயிர் அற்ற வடிவங்களில் வைத்து வணங்குவதும் குற்றமாகா தோவெனிற், குற்றமாகாது.

சிறு குழந்தையாய் இருந்த காலத்திலே தன் தாய் தந்தை யரைப் பிரிந்து நெடுந்தொலைவிலுள்ள ஓர் இடத்திற் பிறரால் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் ஆண்டு முதிர முதிர அறிவும் முதிரப் பெற்றவனாய்த் தன் தாய் தந்தையரைக் காண விரும்பியபோது, அவனை வளர்த்து வந்தவர் அவன் தாய் தந்தையர் தம் ஓவியத்தைக் காட்ட அவன் அதில் அவர்களைக் கண்டு வணங்கி அகம் மகிழ்தல்போல, எல்லையின்றி எங்கும் நிறைந்த இறைவனைப் பிரிந்து அவனது திருவருள் வடிவைக் காணமாட்டாமல் அறியாமையிற் கட்டுண்டு கிடக்கும் நம்மனோர்க்குச் சிறிது சிறிதாக அறிவை விளங்கச் செய்து வருந் திருஞானசம்பந்தர், மெய்கண்ட தேவர் முதலான நம் வளர்ப்புத் தந்தைமார் நமது அவாவினை அறிந்து, தாம் கண்ட

தம் ஐயன் அருள் வடிவைக் கல்லிலுஞ் செம்பிலும்

அமைப்பித்துக் காட்ட, நாம் அதனைக் கண்டு வணங்கி அதன் வழியே நம் ஐயனை அறிந்தவர்களாய் அகங் களித்து வருகின்றனம் அல்லமோ?

ஓவியத்தின் கண்ணே தம் உருவங்களைக் கண்டு தம் புதல்வன் மனம் மகிழ்ந்து வணங்குகின்றான் என்பதைச் சேய்மைக்கண் உள்ள அவன் பெற்றோர்கள் அறிந்து, அவனது அன்பிற்குத் தாமும் மனம் L மகிழ்வார்களேயல்லாமல் அவன்மேற் சினங்கொள்வார்களோ? இங்ஙனமே, நாமும் நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/48&oldid=1584250" இலிருந்து மீள்விக்கப்பட்டது