உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் 17

ஐயன் அருள் வடிவை நேரே காண இயலாமையால், அதனை நம் ஆசிரியர் உதவி கொண்டு கல்லிலுஞ் செம்பிலுங் கண்டு அன்பால் அகந்துளும்பி வழிபட, அதனை அறியும் நம் ஆண்டவன் அதற்கு மகிழ்ந்து அவ்வழிபாட்டினை ஏற்றுக் காண்டு நம்மைப் பாராட்டிச் சீராட்டி வருவான் என்பதே திண்ணம்.

நம் முழுமுதற் றந்தையின் இரக்கத்திற்கு ஒரு வரம்பேயில்லை. சிற்றறிவினரும் ஏழை மக்களுமான நாம் நம் பெருமானை அடைதற் பொருட்டு, இத்துன்பக் கடலின்கண் அவன் திருவுருவ அடையாளங்களாகிய தெப்பங்களைக் கைப்பற்றிக்கொண்டு தத்தளித்து வருவதைக் கண்டு, அவன் நம்மேல் மிகவும் இரக்கம் உடையனாகி நமக்குத் தனது அருளை வழங்கி நம்மை இப்பிறவிக் கடலினின்றுங் கரையேற்றித் தனது பேரின்ப நாட்டில் வாழ்விப்பனேயல்லாது, நம்மேற் சினந்து நம்மை அதன்கண் அமிழ்த்தித் தாழ்விப்பான் அல்லன்.

ஆதலால், முழுமுதற் கடவுளான நம் ஐயனைச் சேருங் கருத்தோடு அவன் அருள் வடிவிற்கு அடையாளங்களாகக் கல்லிலுஞ் செம்பிலும் அமைத்த திருவுருவங்களை வணங்கி வருதல் சிறிதுங் குற்றமாகமாட்டாதென்க. திருக்கோயிலுள்ள திருவுருவங்கள் இறைவனையறிதற்கு வைத்த குறிகளே

யல்லாமல் வேறு அல்ல. இவ்வுண்மை,

66

"குறிக ளும்அடை யாளமும் கோயிலும்

நெறிக ளும்அவன் நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்

பொறியிலீர்மனம் என்கொல் புகாததே”

என்னுந் திருநாவுக்கரசு நாயனார் திருமொழிக்கண் நன்கு விளக்கப்பட்ட

மை காண்க.

இனி, முழுமுதற் கடவுளாகிய நம் சிவபெருமானையன்றி, வேறு நம் போன்ற சிற்றுயிர்களின் வடிவங்களைக் கல்லிலுஞ் செம்பிலுஞ் செய்து வைத்துக்கொண்டு அவற்றை வணங்குதலே பெரிதுங் குற்றமாவதாம். மாரி கூளி எசக்கி கறுப்பண்ணன் மதுரைவீரன் முதலிய ஆவிகளெல்லாம் நம்போற் குற்றமுடைய சிற்றுயிர்களாதலின் அவற்றைத் துணையாகக் கொள்வது, ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/49&oldid=1584251" இலிருந்து மீள்விக்கப்பட்டது