உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

25

குருடன் மற்றொரு குருடனைத் துணை கூட்டிச் சென்று இருவரும் பள்ளத்தில் வீழ்தற்கே ஒப்பாம்.

விவிலிய நூலிலுங் கடவுளுக்கு மாறான உருவங்களை வணங்குதல் ஆகாதென்று சொல்லப்பட்டதேயல்லாமற் கடவுளின் திருவுருவத்தை வழிபடுதல் வழுவென்று கூறப்பட்ட தில்லை. “ஈசாவசியோப நிடதத்தின் ஒன்பதாவது மந்திரமும், “அறியாமையொடு கூடிய சிற்றுயிரின் வடிவங்களை வணங்கு பவர்கள் இருள் நிறைந்த நிரயத்திற்குச் செல்கின்றார்கள் என்று இங்ஙனமே கூறுகின்றது.

ஆகையால், முழுமுதற் பரம்பொருளின் உண்மை அருள் வடிவாய் அம்மையப்பராய் நின்ற திருவுருவத்தையும், அம்முதற் பொருளின் பேரருள் விளக்கத்திற்கு இடமாய் மேலோராற் பண்டைக் காலந்தொட்டு வணங்கப்பட்டு வரும் பிள்ளையார் முருகப்பிரான் முதலானோர் திருவுருவங்களையும், இவர்களின் அருள் வழிபட்ட அடியார் திருவுருவங்களையும் அன்றி வேறு எவற்றையும் வணங்குதல் சிறிதும் ஆகாது என்று கடைப் பிடித்தல் வேண்டும்.

ங்ஙனம் மிகவும் புனிதம் உடையதாய் விளங்குந் திருக் கோயிலினையும், அதனுள் நிறுத்தப்பட்டிருக்கும் அருள் அடை யாளங்களையுஞ் சிவமென்றே நினைந்து உள்ளங்கரைந்துருகி வணங்கவே, கன்றை நினைத்த புனிற்றாப்போல இறைவன் அக்குறிகளில் விளங்கியிருந்து அவர்க்கு அருள் வழங்குவன். இதற்குத்,

"திருக்கோயில் உள்ளிருக்குந் திருமேனி தன்னைச்

சிவனெனவே தேறினர்க்குச் சிவன் உறைவன் ஆங்கே”

என்னுந் திருப்பாட்டே சான்றாகும்.

பகலவன் ஒளியில் எங்கும் உள்ள நெருப்பானது காந்தக் கண்ணாடியில் விளங்கித் தோன்றினாற்போல, எங்குமுள்ள இறைவன் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்திருக் கோயிலின் திருவுருவத்தின் கண்ணும் விளங்கித் தோன்றினான் என்று உண்மையாக எண்ணி வழிபடுவார்க்கு அவன் அங்கு முளைத்துத் தோன்றி அருள் புரிதல் திண்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/50&oldid=1584252" இலிருந்து மீள்விக்கப்பட்டது